செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விவாகரத்திற்கு பின்னும் பழசை மறக்க முடியாமல் சமந்தா.. காதல் ஜோடியின் 3வது வருடம்

சமீபகாலமாகவே நடிகை சமந்தா சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அவர் சாதாரணமாக போடும் போஸ்ட்களுக்கு கூட ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த வரிசையில் இவர் தற்போது நாக சைதன்யா குறித்து ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமந்தா தன் காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தார். பெற்றோர்கள் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்த இந்த ஜோடி மிக குறுகிய காலத்திலேயே விவாகரத்து வரை சென்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் அவர்கள் இருவரும் தற்போது வரை தங்கள் முடிவில் உறுதியாக இருக்கின்றனர். இது அவர்களின் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. அதன்பிறகு சமந்தா தன்னுடைய பட வேலைகளில் பிசியாக வலம் வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை போக்குவது, தன்னுடைய விருப்பப்படி வாழ்க்கையை வாழ்வது என்று அவர் வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார். இந்நிலையில் சமந்தா நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த மஜிலி திரைப்படம் குறித்த போஸ்ட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நிஜ காதலர்களான இவர்களின் கெமிஸ்ட்ரி அந்தப் படத்தில் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனது. தற்போது இப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.

இதை நினைவு கூறும் வகையில் சமந்தா அந்த படம் தொடர்பான போஸ்டர்களை வெளியிட்டு தன் மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார். விவாகரத்து அறிவித்த உடனே சமந்தா தன் பெயருக்குப் பின்னால் இருந்த நாக சைதன்யாவின் குடும்பப் பெயரை நீக்கி விட்டார்.

அதோடு அந்த குடும்பத்துடன் இருக்கும் தொடர்புகளையும் அவர் விடுவித்துக் கொண்டார். இந்நிலையில் தற்போது அவர் போட்டிருக்கும் இந்த போஸ்ட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Trending News