ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நிம்மதியை தேடி ஊர் ஊராக சுற்றும் சமந்தா.. கடைசியில் சாமியாரிடம் சரணடைந்த புகைப்படம்

Actress Samantha: தென்னிந்திய நடிகைகளுக்கு மிகப்பெரிய போட்டியாக இருந்து வந்தவர் சமந்தா. புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு பிறகு சமந்தாவின் ஒட்டுமொத்த மார்க்கெட்டும் உச்சத்திற்கு சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதிலிருந்து சில மாதங்களுக்குள்ளேயே அவருக்கு மையோசைட்டிஸ் என்னும் வித்தியாசமான நோய் தாக்கி சிகிச்சை எடுக்க வேண்டிய நிலையில் வந்துவிட்டார்.

நடிகைகளில் சில பேர் விவாகரத்திற்கு பிறகு சினிமாவை விட்டு காணாமல் போய்விடுவார்கள். ஆனால் நடிகை சமந்தா தன் காதல் கணவரான நாக சைதன்யா உடனான விவாகரத்திற்கு பிறகும் கூட நம்பர் ஒன் நடிகையாக இருந்து வந்தவர். பல பேருக்கும் உதாரணமாக இருந்த இவர் தற்போது நோயின் தாக்கத்தால் அப்படியே டல்லாகி விட்டார்.

Also Read:படமே இல்லாமல் தலைகணத்தோடு ஆடும் நயன்தாரா.. ஓவர் அட்ராசிட்டியால் பின் வாங்கும் தயாரிப்பாளர்கள்

சிகிச்சையில் இருந்து கொண்டே ஜிம் வீடியோக்கள் வெளியிடுவது, படங்களில் நடிப்பது என தன்னால் முடிந்த வரை போராடினார் சமந்தா. வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த இவர், தற்போது மேல் சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அதற்கேற்றார் போல் சில தினங்களுக்கு முன்பில் இருந்து சமந்தா ஆன்மீகப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கூட வந்து அவர் தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. தற்போது நிம்மதியைத் தேடி வேறொரு இடத்திற்கு சென்று சரணடைந்து விட்டார் இவர்.

Also Read:நயன்தாராவுக்கு போட்டியாக பாலிவுட்டில் இறங்கும் ஹீரோயின்.. பெட்டிகளை இறக்கி அட்லீ எடுத்த புது அவதாரம்

கோயம்புத்தூர் அருகே இருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு இந்திய நடிகைகள் பலரும் சென்று வருகின்றனர். மேலும் தங்களுடைய அனுபவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு, அவர்களையும் அங்கே செல்லுமாறு நிறைய நடிகைகள் சமூக வலைத்தளங்களில் சொல்லி வருகிறார்கள். சமந்தாவும் அடிக்கடி இங்கு வந்து போவது வழக்கம்.

                                                          ஈஷா மையத்தில் சமந்தா இருக்கும் புகைப்படங்கள்

Samantha at Eesha
Samantha at Eesha

இப்போது தன்னுடைய ஆன்மீகப் பயணத்தில் ஒரு பகுதியாக ஈஷா மையத்தில் சரணடைந்து இருக்கிறார் சமந்தா. விவாகரத்து, நோய் தாக்குதல் என அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வரும் இவர் நிம்மதியைத் தேடி இங்கு வந்து தஞ்சமடைந்து இருக்கிறார். ஈஷா மையத்தில் சமந்தா இருக்கும் புகைப்படங்களை பார்த்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Also Read:சின்னத்திரை நயன்தாராவுடன் ஜோடி சேரும் யோகி பாபு.. மண்டேலாவுக்கு மட்டும் அதிர்ஷ்டம் கூறை பிச்சுக்கிட்டு கொட்டுது

Trending News