நட்சத்திர தம்பதியர்களான நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஆன நான்கே மாதத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்றெடுத்ததால் பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து அரசும் அவர்களது தரப்பில் விளக்கம் கேட்டிருக்கிறது. இந்நிலையில் சமந்தா வாடகைத்தாய் கான்செப்ட்டை மையமாகக் கொண்டு நடித்திருக்கும் யசோதா திரைப்படம் உலகெங்கும் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.

இதில் சமந்தா லீட் ரோலில் நடித்திருக்கிறார். இவருடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராம் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் அனல் பறக்கும் ட்விட்டர் பதிவுகளை பதிவிட்டுள்ளனர். இதில் சமந்தாவிற்கு ஹைதராபாத், விஜயநகரம், விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களில் கதாநாயகன்களுக்கு அடிக்கும் கட்டவுட்டுகளுக்கு நிகராக தியேட்டர்களின் முன்பு கட் அவுட் வைத்து சமந்தா ரசிகர்கள் மாஸ் காட்டியுள்ளனர்.

Also Read: ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கில் பிசினஸான யசோதா.. மருத்துவமனையில் இருந்தே வாயடைக்க வைத்த சமந்தா
மேலும் இந்த படத்தில் சமந்தாவின் நடிப்பும், படத்தின் பிஜிஎம் பக்கவாக இருக்கிறது என்றும் புகழ்ந்துள்ளனர். இது அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் யசோதா படத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் பார்ப்போருக்கு மன நிறைவை அளிக்கும் எமோஷனல் திரில்லர் படமாகவும் இருக்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்த்து போகும் இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி ஆகவும் யசோதா இருப்பதுடன் கிளைமாக்ஸில் அதிரடி ட்விஸ்டையும் வைத்துள்ளனர். என்னதான் இந்தப் படத்தில் சமந்தா பணத்திற்காக வாடகை தாயாக நடித்திருந்தாலும் இவருடைய சில விஷயத்தை இந்த படத்தில் டீசன்டாகவும் சொல்லி இருக்கின்றனர்.
Also Read: நயன்தாரா மார்க்கெட்டை இறக்க சமந்தா செய்த வேலை.. ட்ரெண்டிங்கில் இருக்கும் யசோதா ட்ரெய்லர்
பெரும்பாலும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை குவிந்து கொண்டிருப்பதால் நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் சமீபத்தில் வெளியான மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன், அதைத் தொடர்ந்து காந்தாரா போன்ற படத்திற்குப் பிறகு சமந்தாவின் யசோதா திரைப்படமும் வெளிநாடுகளில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் பாக்ஸ் ஆபிஸை மிரள விட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

ஏனென்றால் முதல் நாளிலேயே அமெரிக்காவில் யசோதா படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துக் கொண்டிருக்கிறதாம். மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் போது சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இதில் சமந்தாவின் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று ட்விட்டரில் ரசிகர்கள் கொடுக்கும் நேர்மறையான விமர்சனங்களை பார்த்து சமந்தாவும் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

Also Read: நான் உயிருடன் இருக்கிறேன், உருக்கமாக பேசிய சமந்தா.. பதறிப் போய் ஆறுதல் கூறும் திரையுலகம்