திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

13 வருடங்களில் சமந்தா நடிப்பில் மறக்க முடியாத 6 ஹிட் படங்கள்.. இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ‘யசோதா’

நடிகை சமந்தா தமிழில் மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் அடுத்தடுத்து இவருக்கு வெற்றி படங்கள் அமைய அப்படியே தமிழ் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார். இவர் சினிமாவிற்குள் வந்து 13 வருடங்கள் ஆகியும் இன்றும் தனக்கான ரசிகர் கூட்டத்தை அப்படியே வைத்திருக்கிறார். மேலும் இவர் நடித்த கதாபாத்திரங்களில் மறக்க முடியாதவை என நிறைய இருக்கின்றன.

நீதானே என் பொன்வசந்தம்: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சமந்தா மற்றும் ஜீவா நடித்த திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இந்தப் படத்தில் நித்யா என்னும் கேரக்டரில், தன்னுடைய பேரழகால் இளசுகளை கிறங்கடித்தார் நடிகை சமந்தா.

Also Read: பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த சமந்தா.. வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம்

சூப்பர் டீலக்ஸ்: மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் உருவான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் போன்ற நடிப்பு அரக்கன்களுக்கு நடுவில் தன்னுடைய வேம்பு என்னும் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்து இருப்பார் சமந்தா.

ஓ பேபி: ஓ பேபி திரைப்படம் தெலுங்கில் நேரடி ரிலீஸ் ஆகி மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 70 வயது உடைய பெண் திடீரென்று 25 வயது பெண்ணாக மாறும் திரை கதையை கொண்ட இந்த படத்தில் நடிகை சமந்தா தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார் என்றே சொல்லலாம்.

10 எண்றதுக்குள்ள: சீயான் விக்ரமுடன் நடிகை சமந்தா இணைந்து நடித்த திரைப்படம் 10 எண்றதுக்குள்ள. இந்த படத்தில் அவர் ஷகிலா என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். குழந்தைத்தனமான சகிலா கேரக்டராக இருக்கட்டும் கிளைமாக்ஸ் இல் வரும் வில்லி கேரக்டராக இருக்கட்டும் இரண்டிலயுமே கலக்கியிருப்பார் சமந்தா.

Also Read: சமந்தா போல ரகசியமான நோயால் பாதிக்கப்பட்ட 5 நடிகைகள்.. விஜய் பட நடிகைக்கு ஏற்பட்ட கொடுமை

யசோதா:சமந்தா தனி கதாநாயகியாக நடித்து வெளியான திரைப்படம் யசோதா. மாஸ் ஹீரோ நடித்து வெளியாகும் திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்குமோ அதைவிட அதிகமான வரவேற்பை பெற்றது இந்த யசோதா திரைப்படம். இந்த படத்தில் சமந்தா சண்டை காட்சிகளிலும் அசத்தியிருந்தார்.

காத்து வாக்குல ரெண்டு காதல்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் சமந்தா நடித்த கதீஜா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: நயன்தாரா, திரிஷா இடத்தை உடைக்க வரும் அடுத்த நடிகை.. ரீ-எண்ட்ரி கொடுக்க போட்ட பழைய திட்டம்

Trending News