Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விவாகரத்து குறித்து சர்ச்சையை கிளப்பிய அமைச்சர்.. பதிலடி கொடுத்த சமந்தா

விவாகரத்து குறித்து சர்ச்சையை கிளப்பிய அமைச்சர்.. பதிலடி கொடுத்த சமந்தா

Samantha : ஒரு காலத்தில் சமந்தாவுடன் போட்டி போட முடியாமல் டஃப் நடிகைகள் திணறினர். அந்த அளவுக்கு தனது நடிப்பு திறமையால் எக்கச்சக்க படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவரது விவாகரத்து மற்றும் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவரால் […]

Samantha : ஒரு காலத்தில் சமந்தாவுடன் போட்டி போட முடியாமல் டஃப் நடிகைகள் திணறினர். அந்த அளவுக்கு தனது நடிப்பு திறமையால் எக்கச்சக்க படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவரது விவாகரத்து மற்றும் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவரால் அதிக படங்களில் நடிக்க முடியாமல் போனது.

ஆனாலும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு தான் ஆக வேண்டும் என்ற சமந்தா இப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார். இருந்த போதும் அவரைப் பற்றி நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவுக்கு கே டி ஆர் தான் காரணம் என்று கூறியிருந்தார்.

இதற்கு நாக சைதன்யாவும் தனது கண்டனங்களை தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்காக பொங்கி எழுந்த சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதாவது விவாகரத்து என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம்.

விவாகரத்து சர்ச்சை குறித்த சமந்தா போட்ட பதிவு

samantha
samantha

தன்னுடைய சொந்த விஷயங்களை வேறு மாதிரியாக சித்தரித்து கூறுவதை தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் ஒரு அமைச்சராக உங்களுடைய கருத்துக்கள் சமூகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.

அப்படிப்பட்ட நீங்கள் ஒருவரின் தனிபட்ட விஷயங்களுக்கு மரியாதை கொடுங்கள் என்றும் சமந்தா பதிவிட்டு இருக்கிறார். அதோடு உங்களின் அரசியல் சண்டையில் தன்னுடைய பெயரை பயன்படுத்தாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடியவள் நான். எனது விவாகரத்து பற்றி பேச வேண்டாம் என்ற சமந்தா அமைச்சர் கூறிய விஷயத்திற்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். சமந்தாவின் இந்த பதிவு பலராலும் இப்போது கவனிக்கப்பட்டு வருகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.