செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

Samantha: ஒரு ஜான் வயிற்றுக்காக இரட்டை வேஷம் போடும் சமந்தா.. அதிர வைக்கும் ரீல் Vs ரியல் முகம்

Samantha: சமந்தா இடையில் நடிப்புக்கு கொஞ்சம் பிரேக் விட்ட நிலையில் தற்போது மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் கவர்ச்சியான போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு வருகிறார்.

மேலும் அவ்வப்போது ஹெல்த் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அதில் அவர் பேசிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் உடலுக்கு தீங்கு தரக்கூடியவையாக சிலவற்றை அவர் பட்டியலிடுகிறார்.

அதில் கூல்டிரிங்ஸ், சாக்லேட் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என சொல்கிறார். மேலும் தேங்காய் எண்ணெயில் சமைப்பது நல்லது என்றும் பாக்கெட்டுகளில் விற்கும் துரித உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும் கூறுகிறார்.

இப்படி எல்லாம் சொல்லும் அவர் அப்படிப்பட்ட பொருட்களை தான் விளம்பரங்கள் மூலம் மக்களிடம் கூவி கூவி விற்றுள்ளார். அதன்படி ஃபேண்டா, பெப்சி உள்ளிட்ட குளிப்பான விளம்பரங்களில் இவர் நடித்திருக்கிறார்.

ரீல் Vs ரியல் முகம்

அதேபோல் சன் பிளவர் ஆயில், குர்குரே, சாக்லேட் போன்ற பொருட்களின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது ரியல் முகம் எது? ரீல் முகம் எது? என்ற குழப்பமே நமக்கு வந்து விடுகிறது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. எல்லாமே பணம் படுத்தும் பாடு தான். அதற்காகத்தான் கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும் கூட பிரபலங்கள் அதை விளம்பரம் செய்கின்றனர்.

மக்களும் விழிப்புணர்வு இல்லாமல் அந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இப்படித்தான் ரம்மி விளம்பரத்தில் சரத்குமார் நடித்தது சர்ச்சையாக மாறியது.

ஆனாலும் அவர் அதற்கு பொறுப்பில்லாமல் தான் பதில் தந்தார். அந்த வகையில் தற்போது சமந்தா இந்த சர்ச்சைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News