Samantha : சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் சமந்தா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அவ்வாறு சமீபத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இடையே திருமண வாழ்க்கை சில வருடங்கள் நீடித்த நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
நாக சைதன்யா மற்றும் சமந்தா ஒன்றாக போட்ட டாட்டூ

இந்த சூழலில் சமீபத்தில் நாகச் சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அண்மையில் இவர்கள் வெளிநாடு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் உலாவி வந்தது.
இந்நிலையில் நாகச் சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் ஒரே மாதிரியான டாட்டூவை போட்டிருந்தனர். மேலும் விவாகரத்திற்குப் பிறகும் சமந்தா அந்த டாட்டுவை அழிக்காமல் கையில் வைத்திருந்தார்.
அழிந்த நிலையில் சமந்தாவின் டாட்டூ

ஆனால் இப்போது நாகச் சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த டாட்டூவை அழிக்க சமந்தா முடிவெடுத்து இருக்கிறார். ஏனென்றால் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அந்த டாட்டூ அழிந்த நிலையில் உள்ளது.
மேலும் நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழும்போது அவருடைய நினைவாக இது ஏன் என்று கூட சமந்தா அழிக்க முற்பட்டிருக்கலாம்.