திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பாண்டியனை சமரசம் செய்ய அடுக்கடுக்காக பொய் சொல்லும் சம்மந்தி.. அந்தரத்தில் தொங்கும் தங்கமயில்

Pandian stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் என்னதான் சிக்கனமாகவும் கண்டிப்பாகவும் இருந்தாலும் பிள்ளைகளை வளர்க்கும் விதத்திலும் குடும்பத்தை கொண்டு போகும் விதமும் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை புரிய வைக்கும் விதமாக இருக்கிறது. அத்துடன் பிள்ளைகளை சரியாக வளர்த்து நல்ல முறையில் வளர்த்து விட்டிருக்கிறார்.

ஆனால் இந்த குடும்பத்திற்கு மருமகளாக வந்திருக்கும் தங்கமயில் பொய் பித்தலாட்டம் பண்ணும் குடும்பத்தை சேர்ந்த சம்மந்திகள். இது எதுவும் தெரியாத பாண்டியன் தான் பார்த்து கூட்டிட்டு வந்த மருமகள் தான் தங்கம் என்பதற்கு ஏற்ப ஓவராக பெருமைப்பட்டுக்கொண்டார். ஆனால் சமீபத்தில் தங்கமயில் ஹோட்டலில் விஷயத்தில் சொதப்பியத்தை தெரிந்து கொண்ட பாண்டியன், தங்கமயில் இடம் பேசாமல் ஒதுக்கி வைத்து வருகிறார்.

இதனால் இந்த பிரச்சினையை சரி செய்ய நாங்கள் வருகிறோம் என்று தங்கமயில் அப்பா அம்மா பாண்டியன் குடும்பத்திடம் பேச வந்திருக்கிறார்கள். அப்படி பேசும் பொழுது தங்கமயில் அப்பா எங்களுக்கு 26 ஆயிரம் ரூபாய் என்பது பெரிய விஷயமே இல்லை. உங்களுக்கு பணம் தான் பிரச்சனை என்றால் நாங்களே தருகிறோம் என்று ஒரு வார்த்தை விட்டு விடுகிறார்.

இதனால் கோபப்பட்ட பாண்டியன் பணம் பெரிய விஷயம் இல்லை. அதை ஏமாற்ற நினைத்தது தான் பெரிய விஷயம் என்று சொல்லி தங்கமயில் அப்பா அம்மாவுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணுகிறார். ஆனாலும் தங்கமயிலின் அப்பா அம்மா, இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக புது பிரச்சனையில் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டார்கள்.

அதாவது நாங்கள் இந்த விஷயத்துக்காக மட்டும் வரவில்லை மயிலுக்கு நல்லபடியாக கல்யாணம் முடிந்து விட்டால் குலதெய்வ கோவிலுக்கு வந்து வேண்டுதல் பண்ணுகிறோம் என்று நினைத்திருந்தோம். அது விஷயமாக உங்களிடம் பேசிவிட்டு குடும்பத்துடன் வாங்க என கூப்பிட தான் வந்தோம் என தங்கமயில் அப்பா உளறுகிறார். இதைக் கேட்டதும் பாண்டியன் கண்டிப்பாக குடும்பத்துடன் வந்து விடுகிறோம் என்று வாக்கு கொடுக்கிறார்.

ஆனால் தங்கமயில் இருக்கிற பிரச்சினை போதாது என்று நீங்கள் வேற தேவை இல்லாமல் பொய் சொல்லி அடுக்கடுக்காக என்னை சிக்கலில் மாட்டி விட்டுட்டு வரீங்க என்று கோபப்படுகிறார். இப்படியே போனா என்னை நடுத்தெருவில நீங்களே கொண்டு வந்து நிறுத்திருவீங்க போல, நாளைக்கு எந்த குலதெய்வம் கோயிலுக்கு போய் பொங்கல் வைக்க போறீங்க என்று தங்கமயில், அப்பாவிடம் கேட்கிறார்.

இதற்கு பதில் சொல்ல முடியாத தங்கமயில் அப்பா திரு திருவென்று முழித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தங்க மயிலின் அம்மா திடீரென்று ஒரு ஐடியா கொடுத்து இந்த பிரச்சினையை முடிக்கும் விதமாக ஒரு கோயிலுக்கு போகலாம் என்று குடும்பத்துடன் போயி அங்க பொங்கல் விட்டு சாமி கும்பிட்டு வரலாம் என முடிவெடுத்து விட்டார். ஆனால் இந்த பிரச்சனை எங்க போய் முடியுமோ என்று தெரியாமல் தங்கமயில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

Trending News