வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாண்டியன் கொடுக்கும் பதிலடியால் வாயடைத்துப் போன சம்மந்தி.. கொளுத்தி போட்ட தங்கமயில், கொந்தளித்த கோமதி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அம்மாவை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு கோமதி வந்திருக்கிறார் என்ற விஷயம் சக்திவேல் மற்றும் முத்துவேலுக்கு தெரிந்துவிட்டது. உடனே அங்கே இருக்கும் மனைவிகளிடம் சண்டை போடுகிறார்கள். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாத அப்பத்தா மறுபடியும் உடம்பு சரியில்லாத போல் நடித்து விடுகிறார்.

உடனே டாக்டர் இங்க வந்து இந்த மாதிரி கூச்சல் போட்டு சண்டை போடக்கூடாது என்று சொல்லி சக்திவேல் மற்றும் முத்துவேலுவை வீட்டுக்கு போக வைக்கிறார்கள். போகும் போது சக்திவேல் இது ஆஸ்பத்திரியாக இருப்பதால் நான் உன்னை விடுகிறேன் வீட்டுக்கு வா மற்றது எல்லாம் பேசிக் கொள்கிறேன் என்று சொல்லி போய் விடுகிறார்.

வீட்டிற்கு ராஜியின் அம்மாவும் கூட போகிறார். போனதும் சக்திவேல் சண்டை போடுகிறார். பிறகு ராஜி கதிர் மற்றும் கோமதி வந்து இருக்கிறார் என்று தெரிந்தவுடன் சக்திவேல் பாண்டியன் வீட்டுக்கு முன்னாடி நின்னு கூச்சல் இடுகிறார். உடனே பயந்து போன கோமதி நம்ம ஹாஸ்பிடல் போனது தெரிந்து விட்டது. அதனால் தான் பிரச்சினை பண்ணுவதற்கு வந்துவிட்டார்கள் என்று பயப்பட ஆரம்பித்து விட்டார்.

உடனே கதிர் நீ உள்ளே இரு அம்மா. நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்று சொல்லி செந்தில், கதிர், மீனா, ராஜி அனைவரும் வெளியே வருகிறார்கள். இவர்கள் வந்ததும் சக்திவேல் கதிரை பார்த்து திட்டுகிறார். அந்த நேரத்தில் பாண்டியனும் வந்து விடுகிறார். ஆனால் பாண்டியனுக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாததால் ஏன் இங்கு வந்து பிரச்சனை பண்ணுகிறாய் என்று கேட்கிறார்.

பிறகு கோமதி ஹாஸ்பிடல் போனது சக்திவேல் சொல்லி நிலையில், மனைவிக்கு சப்போட்டாக பாண்டியன் ஆஸ்பத்திரியில் இருப்பது உனக்கு மட்டும் அம்மா இல்லை கோமதிக்கும் அம்மா தான். அதனால் உடம்பு சரியில்லாமல் இருப்பதினால் பார்க்க தான் போய் இருப்பாள். அப்படித்தான் செய்வார் என்று சொல்லி சக்திவேலுக்கு பதிலடி கொடுத்துவிட்டார்.

அடுத்ததாக வீட்டிற்குள் நுழைந்த பாண்டியன் மறுபடியும் ஒரு பஞ்சாயத்து பண்ணி இந்த பிரச்சனையை சுமுகமாக முடித்து விட்டார். அடுத்ததாக தங்கமயில், சரவணன் மற்றும் பாண்டியன் சரியாக பேசவில்லை என்று அம்மாவிடம் ஆதங்கத்தை சொல்லும் விதமாக போன் பண்ணி எல்லாத்தையும் சொல்கிறார். உடனே பாக்கியம், நான் உங்க வீட்டுக்கு வருகிறேன் வந்ததும் எல்லா பிரச்சனையும் சரி பண்ணி வைக்கிறேன் என்று சொல்லுகிறார்.

அதன்படி பாண்டியன் வீட்டிற்கு தங்கமயிலின் அம்மா அப்பா வருகிறார்கள். வந்ததும் ஹோட்டல் பிரச்சினை எல்லாம் பெரிய விஷயமா? வெறும் 26 ஆயிரம் ரூபாய் தானே என்று சொல்கிறார். நாங்கல்லாம் எங்கள் பிள்ளைகள் சந்தோஷத்தில் கணக்கு பார்க்க மாட்டோம் என்று தங்கமயில் அப்பா சொல்கிறார். இதை கேட்டு கோபப்பட்ட கோமதி 26 ஆயிரம் ரூபாய் கொடுத்து தான் சந்தோசமாக இருக்கணும் என்ற அவசியம் இல்லை என்று சொல்கிறார்.

உடனே தங்கமயில் அப்பா, நாங்கள் வேணும் என்றால் அந்தப் பணத்தை திருப்பித் தருகிறோம் என்று சொல்கிறார். இதை கேட்டதும் கோபப்பட்ட பாண்டியன் மூஞ்சி கொடுத்து கூட பேசாமல் பதில் அளிக்கும் விதமாக எங்கள் குடும்ப விஷயத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு அப்படி பணம் நிறைய இருந்தால் கொடுத்துட்டு போங்க என்று சொல்லி தங்கமயில் அப்பா அம்மா எதுவும் பதில் பேச முடியாது அளவிற்கு வாய் அடைக்க வைக்க போகிறார்.

ஒரு நேரத்திற்கு கூட சாப்பாடுக்கு வழி இல்லாமல் திண்டாடும் தங்கமயிலின் அப்பா அம்மாக்கு தேவையில்லாத வெட்டி கௌரவத்தினால் அவமானப்பட போகிறார்கள். இனியாவது இந்த தங்கமயில், அம்மாவிடம் போன் பண்ணி சின்ன பிள்ளை மாதிரி கம்ப்ளைன்ட் பண்ணாம மீனா மற்றும் ராஜிடம் ஒத்து போய் ஒற்றுமையாக இருந்தால் பார்க்க நன்றாக இருக்கும்.

Trending News