ஒரே பெயரில் பல படங்கள் வந்துள்ளன. தமிழில் பில்லா படத்தை அதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். பில்லா, இரண்டு முறையும் வெற்றிபெற்றது. பாலிவுட்டிலும் இதேபோல், ஒரே பெயரில் பல படங்கள் ரிலீசாகி உள்ளன. சில சமயங்களில் ரீமேக்காகவும், சில சமயங்களில் ஒரு படத்தின் தொடர்ச்சியாகவும் வெளியாகியுள்ளன.
இதே போல ஒரே பெயரில், 3 ஹீரோக்களை வைத்து வெவ்வேறு காலகட்டத்தில், வித்தியாசமான கதையோடு படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால் 3 படமுமே மெகா Flop. இத தான் ராசி இல்லாத பெயர் என்று சொல்லுவார்கள் போல.
அந்தப் படத்தின் பெயர் ‘கார்ஸ்’ (karz). 1980ல் வெளியான இப்படத்தில் பிரபல நடிகர் ரிஷி கபூர் நடித்திருந்தார். இயக்குநர் சுபாஷ் காய் இயக்கிய இந்தப் படத்தை அப்போதே அதன் தயாரிப்பாளர் ரூ.1 கோடி செலவழித்து தயாரித்திருந்தார்.
ஆனால், எதிர்பார்த்த வசூலை அப்படம் பெறவில்லை. இது அவருக்கு ஒரு மிக பெரிய Flop ஆக அமைந்தது. முக்கியமாக ரிஷி கபூரின் நட்சத்திர அந்தஸ்த்துக்கே இந்த படம் வெட்டு வைத்து விட்டது என்று கூட சொல்லலாம்.
2002ம் ஆண்டு இதே பெயரை சற்று மாற்றி, ‘கார்ஸ்: தி பர்டன் ஆஃப் ட்ரூத்’ (Karz: The Burden of Truth) என்கிற பெயரில் மீண்டும் படம் எடுக்கப்பட்டது. இம்முறையும் சன்னி தியோல், சுனில் ஷெட்டி மற்றும் ஷில்பா ஷெட்டி என நட்சத்திர பட்டாளங்கள் படம் முழுக்க நிறைந்திருந்தனர். ஆனால், இந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தயாரிப்பாளர் பலத்த நஷ்டத்தை சந்தித்தார். இதில் நடித்த நடிகர்களின் கரியரிலும் மிகப்பெரிய தோல்வி படமாக இது அமைந்தது.
இதன்பின்னர் இயக்குநர் சுபாஷ் காய் இயக்கத்தில் வெளியான ‘கார்ஸ்’ படம் 2008ல் ரீமேக் செய்யப்பட்டது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக் செய்யப்பட்ட இந்தப் படத்தை, சதீஷ் கௌசிக் என்பவர் இயக்க, பிரபல பாடகர் பாடகர் ஹிமேஷ் ரேஷ்மியா நடிகராக அறிமுகமானார். ஆனால் மூன்றாவது முறையும் இந்த படம் மெகா Flop தான்.
வணிக ரீதியாக படம் தோல்வியடைந்ததோடு மட்டுமில்லாமல், ஹிமேஷ், டினோ மோரியா மற்றும் ஊர்மிளா மடோன்கர் என படத்தில் நடித்த நட்சத்திரங்களின் நடிப்பு வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. பெயரை மாற்றி இருந்திருக்கலாம். ஏன் என்றால், ஏற்கனவே ஒரு தோல்வியை கொடுத்த படத்தின் டைட்டில் மீது எப்படி மக்களுக்கு நம்பிக்கை வரும். இதை எப்படி பட குழுவினர் யோசிக்காமல் விட்டனர் என்று தெரியவில்லை.