சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

8 வருஷம் கழித்தும் அதே நிலை!. எதற்காக நாங்க வரி கட்டுகிறோம்.. ஆவேசத்துடன் பேசிய விஷால்

Actor Vishal Open Talk: மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே இப்போது ஸ்தம்பித்து போய் இருக்கிறது. நகரின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்து வெள்ள காடாய் மாறி இருப்பதால் பொதுமக்கள் ரொம்பவே அவதிப்படுகின்றனர். மக்கள் பாதுகாப்பான முகாம்களின் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது.

இருந்தாலும் கடந்த 2015 ஆம் ஆண்டு இதே நிலைதான் சென்னையில் ஏற்பட்டது. ஆனால் இந்த எட்டு வருடத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் என்னதான் செய்தீர்கள் என்று தெரியவில்லை. எட்டு ஆண்டுகள் கழித்து அதைவிட மோசமான நிலை தான் இப்போது சென்னைக்கு ஏற்பட்டிருக்கிறது.

மழை நீரை சேகரிப்பது அல்லது வடிகால் அமைப்பது என எந்த வித முயற்சியையும் சென்னை மாநகரம் எடுத்த பாடில்லை. அவர்களது திட்டம் என்னதான் என்று தெரியவில்லை. பதவிக்கு வருபவர்கள் எல்லாம் பொது மக்களுக்கு வேண்டிய பாதுகாப்பையும் நம்பிக்கையையும் அளிக்க வேண்டும்.

Also read: அஜித்தின் 63வது பட இயக்குனர் பிரபுவின் மருமகன் தான்.. 100% உறுதி செய்த சுரேஷ் சந்திரா

கோபத்தில் கொந்தளித்த விஷால்

இப்போது இருக்கும் சூழ்நிலையால் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதுவரை நான்கு பேர் மிக்ஜாம் புயல் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர். இதனை உடனடியாக சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும்.

எதற்காக நாங்க வரி கட்டுகிறோம் என்று கேட்க வைக்காதீர்கள். உடனே உதவுங்கள் என்று நடிகர் விஷால் பேசிய வீடியோ இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இவர் மட்டுமல்ல திரை பிரபலங்களும் பொதுமக்களும் தங்களின் தொகுதி எம்எல்ஏக்களை சரமாரியாக சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.

Also read: விஷாலை மிஸ் செய்யும் மிஷ்கின்.. துரோகத்திற்கு பழியாக பக்காவாக போட்ட பிளான்

- Advertisement -spot_img

Trending News