செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

துணிவு, வாரிசை விரட்டி அடிக்க போகும் சாமி படம்.. கோலாகலமாக ரிலீசாக போகும் பேன் இந்தியா படம்.

நடிகர்கள் அஜித் ,விஜய் நடிப்பில் அண்மையில் பொங்கலை முன்னிட்டு ரிலீசான வாரிசு, துணிவு படங்கள் 10 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. வாரிசு படத்தை காட்டிலும் துணிவு படத்துக்கு வசூல் ரீதியாகவும்,கதை ரீதியாகவும் ரசிகர்கள் பெரும் ஆதரவை கொடுத்துன் வருகின்றனர். இருந்தாலும் விஜயின் வாரிசு படம் குடும்ப பாங்கான படம் என்பதால் விஜய் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து படத்தை பார்த்து வருகின்றனர்.

ஒருவழியாக பெரும் எதிர்பார்ப்புக்கு பின்பு இந்த இரண்டு படங்களும் திரையரங்கில் ரிலீசான நிலையில், தற்போது விஜய் மற்றும் அஜித் இருவருமே தளபதி 67, ஏகே 62 உள்ளிட்ட இடங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்தாண்டு ஆயுத பூஜை பண்டிகைக்குள் இந்த இரண்டு படங்களும் மீண்டும் தல, தளபதி மோதலில் திரையரங்கில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: லோகேஷ் யுனிவர்சில் மிரட்டப் போகும் அஜித்தின் AK-63.. ரோலக்ஸ் கெட்டப் எல்லாம் வெறும் சாம்பிள் தான்

இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் வாரிசு, துணிவு படத்தை ஓரங்கட்டும் விதமாக பேன் இந்தியா படம் ஒன்று ரிலீசாக உள்ளது. அண்மைக்காலமாக இந்திய சினிமாவில் பேன் இந்தியா படங்களின் மவுசு அதிகரித்துள்ளது. அதற்கான காரணம் நல்ல கதைக்களம், பிரம்மாண்டமான பொருட்செலவு, ஆக்ஷன், காமெடி என அனைத்தும் உள்ளதால் ரசிகர்கள் பேன் இந்தியா படங்களை வரவேற்று வருகின்றனர்.

அப்படியொரு படம் தான் அண்மையில் மலையாளத்தில் ரிலீசான மாளிகப்புரம். இயக்குனர் விஷ்ணு சசி ஷங்கர் இயக்கத்தில் நடிகர் உன்னி குந்தன் நடிப்பில் வெளியான இப்படம் கேரளாவில் சக்கைபோடு போட்டு வருகிறது. சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசிக்க ஆசைப்படும் பெண் சிறுமி, தன் நண்பனுடன் பேருந்தில் ஏறி செல்கிறார். அப்போது மாளிகாபுரம் என்ற இடத்தில் ஹீரோவை பார்த்த சிறுமி அவருடன் சபரிமலைக்கு செல்ல ஆசைப்படுகிறார்.

Also Read: காஷ்மீரில் திண்டாடும் விஜய்.. தளபதி 67க்கு போட்ட ஸ்கெட்ச் எல்லாம் கோவிந்தா!

ஹீரோவும் அந்த இரண்டு சிறுவர்,சிறுமியும் வழியில் பல இன்னல்களை சந்தித்து சபரிமலைக்கு போகிறார்களா, இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை. இப்படம் கேரளாவில் கடந்தாண்டு டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீசான நிலையில், தற்போது வரை வெற்றிகரமாக ஓடி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதனிடையே அண்மையில் இப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் ட்ரைலர் ரிலீஸாகி இணையத்தில் வைரலானது.

தமிழக திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனிடையே விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களை இப்படம் கட்டாயம் வசூல் ரீதியாக ஓரங்கட்ட போவதால் இரு படங்களும் கூடிய விரைவில் திரையரங்கை விட்டு செல்ல உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கேரளாவில் மாளிகப்புரம்.. படத்தின் ரிலீசால் வாரிசு, துணிவு படங்கள் அங்கு சரியாக ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: காந்தாரா போல் அக்கட தேசத்தில் பிளாக்பஸ்டரான மாளிகப்புரம்.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த விமர்சனம்

Trending News