Thiru Manickam Movie Review: இன்று சிறு பட்ஜெட் படங்கள் அதிகமாக வெளிவந்துள்ளன. அதில் சமுத்திரகனியின் திரு மாணிக்கம் நல்ல விமர்சனங்களை பெற்று கவனம் ஈர்த்துள்ளது.
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து அனன்யா, பாரதிராஜா, நாசர் என பலர் நடித்துள்ளனர். இப்படம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.
சமுத்திரக்கனி மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் கேரளாவில் வாழ்ந்து வருகிறார். அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்வதுதான் இவருடைய தொழில்.
குடும்ப பிரச்சனை, கடன் சுமை என பல பிரச்சினை இருந்தாலும் நேர்மையாக வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. ஒரு நாள் இவருடைய கடைக்கு வரும் பாரதிராஜா லாட்டரி சீட்டு வாங்குகிறார்.
திரு. மாணிக்கம் முழு விமர்சனம்
அவருக்கும் ஏகப்பட்ட குடும்ப சுமை இருக்கிறது .இதில் பணம் கிடைத்தால் அத்தனையையும் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு லாட்டரி வாங்குகிறார்.
ஆனால் அவரிடம் இருந்த காசு தொலைந்து போனதால் அந்த சீட்டை எடுத்து வைக்கும் படி கூறுகிறார். கடைசியில் அந்த சீட்டுக்கு ஒன்றரை கோடி பணம் கிடைக்கிறது.
அதனால அந்த சீட்டை பாரதிராஜாவிடம் கொண்டு சேர்க்க சமுத்திரக்கனி புறப்படுகிறார். ஆனால் மனைவி உறவினர்கள் அந்த பணத்தை நாமே வைத்துக் கொள்ளலாம் என வற்புறுத்துகின்றனர்.
இருந்தாலும் நேர்மையோடு புறப்படும் சமுத்திரக்கனி பாரதிராஜாவை சந்தித்தாரா? அவருடைய நேர்மைக்கு கிடைத்த பலன் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது திரு மாணிக்கம்.
வாழ்க்கையில் பணம் முக்கியமா நேர்மை முக்கியமா என்பதை அலசுகிறது இப்படம். எதார்த்தமான திரை கதையை கச்சிதமாகக் கொண்டு சென்ற இயக்குனருக்கு ஒரு பாராட்டுக்கள்.
அதேபோல் சமுத்திரகனியும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். அவரைப் போலவே மற்ற கதாபாத்திரங்களின் தேர்வும் கச்சிதமாக பொருந்தியுள்ளது.
மேலும் பின்னணி இசை ஒளிப்பதிவு அனைத்துமே பிளஸ் ஆக அமைந்துள்ளது. அதனால் படத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படியான குறை ஒன்றும் இல்லை. ஆக மொத்தம் திரு மாணிக்கம் – நேர்மை.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5