திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

அது மாயாவோட வீடு.. ஜால்ரா போடும் கமலை கிழித்தெறிந்த சனம் செட்டியின் முக்கியமான 7 காரணங்கள்

BB7 Tamil: கமலஹாசன் கடந்த ஏழு வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஆனால் இந்த ஏழாவது சீசனில் தான் அவருடைய பெயர் மொத்தமாக டேமேஜ் ஆகிவிட்டது. வீட்டில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டாமல், மாயாவுக்கு, கமல் ஃபேவரிட்சம் செய்வதாக பார்வையாளர்கள் இவ்வளவு நாளாக கொந்தளித்து வந்தார்கள். தற்போது இந்த விஷயம் உண்மை என சொல்லும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் சனம் செட்டி ஏழு காரணங்களை சொல்லி இருக்கிறார்.

சனம் செட்டியின் பதிவு

சனம் செட்டி பதிவிட்டு இருக்கும் ட்வீட்டில், நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் மாயாவுடன் ஏதாவது ஒரு பிரச்சனையை செய்தால், கமலின் கோபத்திற்கு ஆளாவீர்கள் என்று சொல்லி இருக்கிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் மாயாவுக்கு யாரெல்லாம் எதிரியாக இருக்கிறார்களோ அவர்களை கமல் வச்சு செய்கிறார். இது மாயாவை விளையாட்டில் ஆர்வமாக இருக்க இன்னும் தூண்டுகிறது.

மாயா மற்றும் அவருக்கு ஆதரவாக இருப்பவர்கள் நாமினேஷனில் ஓட்டுகள் குறைவாகப் பெற்றால் அந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் கேன்சல் செய்யப்படுகிறது. அதேபோன்று மாயா ஏதாவது குற்றச்சாட்டு வைத்தால் அது உடனடியாக விசாரணைக்கே வருகிறது. எந்த குற்றம் சொல்லி வேண்டுமானாலும் மாயாவுக்கு பிடிக்காதவர்களுக்கு ஸ்ட்ரைக் கார்டு கொடுக்கப்படுகிறது.

Also Read:சேத்துலயும் அடி வாங்கியாச்சு சோத்துலயும் அடி வாங்கியாச்சு.. திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறும் ஆண்டவர்

தவறான வார்த்தைகள் மாயாவால் பேசப்பட்டால் அது என்டர்டெயின்மென்ட் கேட்டகிரியில் சேர்க்கப்படுகிறது. தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அவர்களை மூளை சலவை செய்து தன்னுடைய ஆட்டத்திற்கு ஆதாயமாக பயன்படுத்துகிறார் மாயா. அதை விளையாட்டின் முக்கியமான ஸ்டேட்டர்ஜி என சொல்லி முடித்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் வீட்டிற்குள் யார் இருக்க வேண்டும் யார் வெளியே போக வேண்டும் என்பதை மாயா தான் மறைமுகமாக முடிவு செய்கிறார். இதுவரை அது தவறு என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்ட படவே இல்லை. மாயாவுக்கு பாராட்டும், தேவைப்படும் இடங்களில் மன்னிப்பும் உடனடியாக கமலஹாசனால் வழங்கப்படுகிறது.

மாயா கேப்டனாக இருக்கும் பொழுது எப்படி மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரோ அதேபோல் தான் மற்ற கேப்டன்களும் நடந்து கொள்ள வேண்டும். மாயாவுடன் ஒத்துப் போனால் தான் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்று சனம் செட்டி சொல்லி இருக்கிறார். அவர் சொல்வதை பார்த்தால் மொத்தத்தில் அது பிக் பாஸ் வீடு இல்லை மாயா வீடு என்று தான் தோன்றுகிறது.

Also Read:இந்த வார நாமினேஷனில் வசமாக சிக்கிய 6 பேர்.. பிக்பாஸ் துரத்தி விடப்போவது இவரையா.?

Trending News