வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

விட்டா நடிப்புல ஆஸ்கர் வாங்கிவிடுவார் போல இந்த அர்ச்சனா.. அல்லோல படும் IPS சந்தியா!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சரவணனுக்காக பாராட்டு விழாவில் கலந்துகொள்ள சந்தியா ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அந்த விழாவில் என்ன பேசவேண்டும் என்பதையும் சரவணனுக்கு விடிய விடிய உட்கார்ந்து எழுதிக் கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு பாராட்டு விழாவிற்காக ஆயத்தமாகும் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சந்தோசத்தை கொடுக்கும் விதத்தில் அர்ச்சனா வில்லங்கமாக யோசித்து செயல்படுகிறாள். ஏனென்றால் கர்ப்பமாக இருக்கும் அர்ச்சனா வாந்தி வராத போலே வீட்டில் இருக்கும் மாமியார் மற்றும் சந்தியா இருவரையும் லெமன் ஜூஸ் மற்றும் டீ போன்றவற்றை போட்டு தருமாறு படாத பாடுபடுத்துகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த மாமியார் சந்தியாவை பார்த்துக்கொள் என்று பாராட்டு விழாவிற்கு கிளம்பி விடுகிறார். அதன்பிறகு சந்தியாவிடம் இது வேண்டும் அது வேண்டும் என அர்ச்சனா வயிற்றில் வளரும் குழந்தையை காரணமாக காட்டி அடுத்தடுத்து கேவலமாக  வேலை வாங்கி கொண்டிருக்கிறாள்.

இதனால் கணவருடைய பாராட்டு விழாவை பார்க்க முடியாமல் போகிறதே என சந்தியா அல்லோல படுகிறாள். இவ்வாறு இருக்க அங்கு பாராட்டு விழாவில் சரவணன் சந்தியாவின் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார். இருப்பினும் சந்தியா வராத நிலையில் சரவணன் மேடையில் ஏறி சந்தியா எழுதிக் கொடுத்ததை பேச பேப்பரை விரித்து பார்க்கும்போது அதில் சந்தியாவின் கனவு என்ன என்பதை அந்த பேப்பரில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதை சரவணனுக்கு தெரியப்படுத்த எழுதவில்லை. மாறாக சந்தியாவின் அண்ணன் மகள் அருவியின் பெயர் சூட்டு விழாவில் அருவிக்கு தன்னுடைய கனவை காண்பித்து, அதை அருவி செய்யவேண்டுமென்று சந்தியா கேட்டுக்கொண்டார்.

ஆகையால் வீட்டில் பேப்பர் மாறிவிட்டதால் அது சரவணனின் கைக்கு வந்திருக்கிறது. இனி சரவணன் சந்தியாவின் கனவை தெரிந்துகொண்டு அதற்கேற்றார்போல் சந்தியாவை மாற்ற வீட்டாரின் சம்மதத்துடன் ஐபிஎஸ் படிக்கவைக்க போகிறார்.

Trending News