வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஊர் ஊராக அலையவிடுறாங்க.. உதயநிதியிடம் முதல் கோரிக்கை வைத்த சங்க தலைவர் விஷால்

தற்போது நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். அவருக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்போது அவருடைய நெருங்கிய நண்பரான விஷால், 9 வருடங்களாக உதயநிதியை ஒரு அமைச்சராக பார்ப்பது கனவாக இருந்தது. அது இப்பொழுது நினைவாகி இருக்கும்போது, மிகவும் பெருமைப்பட்டிருப்பதாகவும் சமீபத்திய பேட்டில் தெரிவித்திருந்தார்.

Also Read: நீ பாட்டு பாடுற, உதயநிதி நடிக்க கூடாதா.? சர்ச்சைக்குரிய பிரபலத்தை வெளுத்து வாங்கிய அனகோண்டா நடிகர்

இன்னிலையில் விஷால் அமைச்சரான உதயநிதியிடம் முதன்முதலாக கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். அதாவது தென்னிந்திய சினிமாவின் ஆரம்பம் சென்னை தான். ஆனால் இங்கு உருவாக்கப்படும் ஒவ்வொரு படங்களின் படப்பிடிப்பிற்கும் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருக்கும் ஃபிலிம் சிட்டி-க்குதான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகையால் சென்னையில் போதிய வசதியைக் கொண்ட ஃபிலிம் சிட்டி ஒன்று கூட இல்லை. ஆகையால் வெளி மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்காக போக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் படத்தின் பட்ஜெட்டும் தாறுமாறாக எதிரி கொண்டிருக்கிறது.

Also Read: முன்னுக்குப் பின் முரணாக பேசும் விஷால்.. விஜய்யை பார்த்ததும் பச்சோந்தியாக மாறிய சம்பவம்

இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்பதற்காக தமிழகத்திலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு ஃபிலிம் சிட்டியை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்று விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியிடம் நடிகர் விஷால் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஏற்கனவே பதவி ஏற்ற பிறகு உதயநிதி விளையாட்டிற்கு இளைஞர்களை மேம்படுத்த வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது சினிமாக்காரர்களின் கஷ்டத்தையும் உணர்ந்து அவர்களுக்கு உதவும் விதத்தில் தமிழ்நாட்டில் ஃபிலிம் சிட்டி உருவாக்கித் தர வேண்டும் என பலரும் விஷாலின் கோரிக்கைக்கு தங்களது ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: சரத்குமாரை மறைமுகமாக குத்தி காட்டிய விஷால்.. பணத்திற்காக மீண்டும் பற்றி எரியும் பழைய பகை

Trending News