வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜய் அப்பா காதல் இளவரசனாக அசத்திய 5 படங்கள்.. ஆண்டனி தாசுக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக்கா

Sanjay Dutt Movies: நடிகர் யாஷ் நடித்த கன்னட திரைப்படம் ஆன கே ஜி எஃப் படத்தில் ஆதிரா என்னும் வில்லன் கேரக்டரில் மிரட்டி இருப்பார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இதன் மூலம் தான் அவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமானார். தொடர்ந்து லியோ படத்தில் இவருக்கு வில்லன் கேரக்டர் தான். கரடு முரடான வில்லனாகவே தென்னிந்திய சினிமா ராசிகர்களால் பார்க்கப்படும் சஞ்சய் ஒரு காலகட்டத்தில் காதல் ஹீரோவாக கலக்கியவர். அவருடைய நடிப்பில் வெளியான 5 காதல் படங்களை பார்க்கலாம்.

ஆண்டனி தாஸ் காதலில் உருகிய ஐந்து படங்கள்

ராக்கி: நடிகர் சஞ்சய் தத்தின் அப்பா சுனில் தத் இயக்கிய ராக்கி படம் 1981 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. தன்னுடைய இயக்கத்தில் தன் மகனை அறிமுகப்படுத்தினார் சுனில் தத். சஞ்சய் இதில் ராக்கி என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். தன் தந்தையின் இறப்புக்காக பழிவாங்கும் மகனின் வாழ்க்கை முறையைப் பற்றிய கதை. இதில் பிளாஷ்பேக்குக்கு முன்பு வரை சஞ்சய் காதல் காட்சிகளில் மிதந்திருப்பார்.

Also Read:அடேங்கப்பா! நம்ம ஆண்டனி தாஸின் சொத்து மதிப்பு இவ்வளவா.? பாலிவுட்டை மிரள விடும் உண்மையான கேங்ஸ்டர் ஹீரோ

ஜானி ஐ லவ் யூ: 1982 ஆம் ஆண்டு ராகேஷ் குமார் இயக்கத்தில் சஞ்சய் தத் நடித்த படம் ஜானி ஐ லவ் யூ. படத்தில் சஞ்சய் ராஜு சிங் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். இதில் அவருக்கு ஜோடி ரதி அக்னிகோத்ரி. தொலைதூர மலை பகுதியில் வசிக்கும் ஜானியின் வாழ்க்கையில் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர் தேடி செல்லும் பயணம் தான் இந்த படத்தின் கதை.

சாஜன்: 1991 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஒரு அழகான காதல் கதை தான் சாஜன். இந்த படத்தில் சஞ்சய் தத், மாதுரி தீட்சித், சல்மான் கான் ஆகியோர் இணைந்து நடித்திருந்தார்கள். இது ஒரு முக்கோண காதல் கதை ஆகும். மாதுரி தீட்சித்தை சல்மான் கான் மற்றும் சஞ்சய் இருவருமே காதலிக்க கடைசியில் இந்த காதல் யாருக்கு ஜெயித்தது என்பது தான் இந்த படத்தின் கதை.

சாஹிபான்: 1993 ஆம் ஆண்டு ரிஷிகபூர், சஞ்சய் தத், மாதிரி தீட்சித் ஆகியோர் இணைந்து நடித்த படம் சாஹிபான். சஞ்சய் தத் மற்றும் ரிஷி கபூர் இருவருக்கும் இடையே மாதிரி தீட்சித்தை சுற்றி நடக்கும் முக்கோண காதல் கதை தான் இந்த படம். இந்த படத்தின் பட்ஜெட் 1.48 கோடி ஆகும். உலக அளவில் இந்த படம் 3.50 கோடி வசூலித்து மெகா ஹிட் ஆக வெற்றி பெற்றது.

முன்னா பாய் எம்பிபிஎஸ்: சஞ்சய் தத் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் முன்னா பாய் எம்பிபிஎஸ். இந்த படம் தான் அவருடைய அப்பா சுனில் தத் கடைசியாக நடித்த படம். தமிழில் கமலஹாசன் மற்றும் பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் இந்த படத்தின் தமிழ் உருவாக்கம் தான்.

Also Read:மிச்ச இருந்த மானத்தை நெட்பிளிக்ஸ் வாங்கிட்டான்.. லியோவால் விஜய்க்கு ஏற்பட்ட அவமானம்

Trending News