திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கோடிகளை கொட்டிக் கொடுத்த தளபதி 67 டீம்.. வில்லன் நடிகருக்கு இவ்வளவு சம்பளமா

விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் இந்த படம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. இதை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்தப் படம் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதற்காக அர்ஜுன், பிரித்விராஜ், சஞ்சய் தத் என பெரும் போட்டியே நடந்தது.

Also read : விஜய்யை தூக்கிக் கொண்டாடும் போனி கபூர்.. விஷயத்தைக் கேள்விப்பட்டு கடுப்பான அஜித்

அதில் இப்போது சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் இவர் கே ஜி எஃப் 2 திரைப்படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார். அவரின் மிரட்டலான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அவருக்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்திருக்கிறது.

அந்த வகையில் தமிழில் விஜய்க்கு வில்லனாக அறிமுகமாக இருக்கும் இவர் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க 15 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டு இருக்கிறார். இதனால் அதிர்ந்த பட குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். தற்போது அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also read : லோகேஷ் கூப்பிட்டும் நடிக்க மறுத்த ஸ்டைலிஷ் வில்லன்.. தளபதி 67 கொடுக்கப் போகும் மாஸ் என்ட்ரி

மேலும் வில்லன் நடிகருக்கு இத்தனை கோடி சம்பளமா என்று தற்போது திரையுலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது. இவ்வளவு கோடி கொடுத்து அவரை புக் செய்து இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அவருக்கு பவர்ஃபுல்லான கதாபாத்திரம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்ரம் திரைப்படத்தின் மூலம் பலரையும் மிரட்டிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை படு மாஸாக எடுப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறார். அடுத்த வருட பண்டிகை நாளில் இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Also read : விஜயுடன் செல்பி புகைப்படம் எடுத்த ராஷ்மிகா.. சூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பான வம்சி

Trending News