திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யை திட்டி சண்டை போட்ட சஞ்சீவ்.. வெளிவந்த பல வருட ரகசியம்

தளபதி விஜய்யின் நண்பர்கள் வட்டம் மிகச் சிறியதுதான். விஜய் யாரிடமும் உடனே நெருங்கி பழகிட மாட்டார். அவருக்கு சிறு வயது முதலே ஆறு முதல் ஏழு நண்பர்கள் மட்டும் தான். இவர்கள் கூட தான் வெளியில் செல்வது மற்றும் சில விஷயங்களைப் பகிர்வதை வழக்கமாக வைத்திருப்பார்.

அதில் குறிப்பாக சஞ்சீவ், ஸ்ரீமன், பிரசன்னா, ஸ்ரீநாத் போன்றவர்கள் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் எல்லோரும் தற்போது ஒரே நல்ல நிலைமையில் உள்ளனர். இவர்களுக்குள் யாரும் தொழில் சம்பந்தமாக எந்த சிபாரிசும் செய்யக்கூடாது என இவர்களுக்கு இடையே ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

விஜய்யின் பல படங்களில் சஞ்சீவ் நடித்துள்ளார். சமீபத்தில் சஞ்சீவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது விஜய் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் வீட்டுக்கு அருகில்தான் சஞ்சீவின் வீடும் உள்ளது.

இவர்கள் இருவரும் அடிக்கடி சந்திக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல் சாப்பாடு பரிமாறிக் கொள்வார்கள். அதைவிட விஜய் மற்றும் சஞ்சய் இருவரும் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொள்வார்களாம். ஆரம்ப காலத்தில் சஞ்சீவ் விஜய்யை அடிக்கடி திட்டிக் கொண்டே இருப்பாராம்.

அது சரியில்லை, இது சரியில்லை, அப்படி நடக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்று சொல்வாராம். அதுமட்டுமல்லாமல் சமீபத்திய பேட்டி ஒன்றில் சஞ்சீவ் ஆரம்பத்தில் விஜய்க்கு நடனம் சொல்லிக் கொடுப்பதே நான்தான் என கூறியிருந்தார்.

10 மாதங்கள் முன்பு சஞ்சீவ் இருக்கும் விஜய்க்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சஞ்சீவ் விஜய்யை பார்த்து நீ என்ன பெரிய இவனா, அப்படி நீ என்ன ஜெயிச்சுட்டே, உன்ன யார் நெனச்சிட்டு இருக்க என விஜய்யை கோபமாக திட்டியுள்ளார். ஆனால் விஜய்யின் மெர்சல் ஆடியோ லான்ச் விழாவின்போது விஜய்க்கான கிரவுட் அந்த மாஸ் பார்க்கும் போது விஜய்யை பார்த்து அந்த வார்த்தைகள் சொன்னது தவறு என புரிந்ததாகக் கூறினார்.

விஜய்யை பார்த்து நீ என்ன ஜெயிச்சுட்டே என கேட்டேன் ஆனால் விஜய்யின் பெயர் சொல்வதற்கு முன்பு அங்கு கோடான கோடி ரசிகர்கள் கத்தும் போது தான் விஜய்யின் வளர்ச்சியை பார்த்து வியந்ததாகக் கூறினார். என்னதான் நண்பனாக இருந்தாலும், இனிமேல் விஜய்யை திட்டினால் அது நன்றாக இருக்காது என திட்டுவதை நிறுத்தி கொண்டுள்ளார் சஞ்சீவ்.

இதை மெர்சல் பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது சஞ்சீவ் தெரிவித்துள்ளார். ஆனால் தளபதி விஜய் இதையெல்லாம் விரும்பமாட்டாராம், எப்போதும் போல பழையபடி இப்படி சகஜமாக இருப்பதையே தான் விஜய் விரும்புவாராம்.

Trending News