சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

ஷங்கர் மகள்களை நோஸ்கட் செய்த மகேஷ் பாபு.. அதுவும் பொது இடத்தில்!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள்களை பொது இடத்தில் நோட் கட் செய்த செய்தியை வெளியிட்டு அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். அது தான் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு தமிழ் சினிமாவிலும் கணிசமாக ரசிகர்கள் இருக்கின்றனர். மகேஷ்பாபு நடிப்பில் அடுத்ததாக சர்க்காரு வாரிபாட்டா என்ற படம் மே 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மகேஷ்பாபு ஒரு பெரிய விஷயத்தை ஷேர் செய்துள்ளார். ஒருமுறை மகேஷ்பாபு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹோட்டலுக்கு டின்னர் சென்றுள்ளார். ரகசியமாக சென்றிருந்தாலும் அவரை அடையாளம் கண்ட இரண்டு பெண்கள் அவரிடம் போட்டோ எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் மகேஷ் பாபு தன்னுடைய குடும்பத்தினருடன் வந்துள்ளதால் போட்டோ கொடுக்க முடியாது என சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம். அதன்பிறகு அருகில் இருந்தவர்கள் அந்த இருவரும் இயக்குனர் சங்கரின் மகள் என எடுத்துச் சொன்னாலும் அவரை தேடி பார்த்தாராம்.

உடனடியாக ஷங்கரிடம் சென்று இந்த விஷயத்தைத் தெரிவிக்க அவரோ கூலாக நடிகர் நடிகைகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என ஈஸியாக சொல்லி விட்டாராம். இருந்தாலும் அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு சென்றாராம் மகேஷ் பாபு.

அதுமட்டுமில்லாமல் எவ்வளவு பெரிய பிரம்மாண்ட இயக்குனராக இருந்தாலும் தன்னுடைய மகள்களை அவ்வளவு சிம்பிளாக வளர்த்து வருகிறார் என்பதை பார்த்து ஆச்சரியப் பட்டதாகவும் மகேஷ்பாபு வியந்து கூறியுள்ளார்.

Trending News