செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சங்கரின் அடங்காத விருது ஆசை.. இதுக்கு யாரெல்லாம் பலிகடா தெரியுமா?

தேசிய விருது, மாநில விருது, இன்டர்நேஷனல் விருது என விருது ஆசைகள் யாரைதான் விடாது. நடிகர்கள், நடிகைகள் என தொடங்கி இயக்குனர்கள் அனைவருக்கும் இந்த ஆசை உள்ளது.

அதேபோல இந்தியன் 2 வில் சங்கருக்கும் நிறைய விருது வாங்க வேண்டும் என்று பேராசை இருக்கிறார். ஆனால் அந்த விருது வாங்குவதில் வந்துள்ள சிக்கல்தான் அவருக்கு ஒரு குடைச்சலை ஏற்படுத்தி விட்டது.

ஒரு திரைப்படத்தை விருது விழாவிற்கு அனுப்ப வேண்டுமென்றால் அந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சொந்த குரலில் பேசி டப்பிங் கொடுக்க வேண்டும். இந்தியன் 2 படத்தில் நடித்துள்ள பலருக்கு தமிழ் தகிடதத்தோம் புரிகிறது. ஆனாலும் சங்கர் விடாமல் தமிழ் பேச பழக்கி அனைவரையும் பேச வைத்து வருகிறார்.

ஒரு டீக்கடைக்காரர் இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவருடைய நம்பரை வாங்கி அவரையும் டப்பிங் பேச அழைத்து வந்திருக்கிறார் சங்கர். அந்த அளவிற்கு விருது பட்டியலில் இடம்பெற வேண்டும் என வேலை செய்யும் சங்கருக்கு ஒரு சிக்கல் வந்துள்ளது.

சங்கருக்கு வந்த சிக்கல்

ஆம், இந்தியன் 2 படத்தில் நடித்த நடிகர் விவேக் அவர்களும், மலையாள நடிகர் நெடுமுடி வேணு அவர்களும் பாதி படத்தில் இறந்து விட்டார்கள். அவர்களுக்கு எப்படி குரல் கொடுக்க முடியும் என்று யோசித்து வருகிறார்.

சங்கரின் விருது வெறிக்கு நடிகர் நடிகைகள் என அனைவரும் பலிகடா ஆகிறார்கள். அதிலும் இறந்து போன நடிகர் விவேக், நெடுமுடி வேணுவும் இருக்கிறார்கள்.

மேலும் அவர்களுக்கு AI உதவியுடன் குரல்களை கொடுத்தாலும் இதனை விருது அளிப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறிதான். ஏற்கனவே ஷூட்டிங்கில் நடந்த விபத்து. தற்பொழுது இந்த பிரச்சனை.

கால் வைக்கிற இடத்துல எல்லாம் கன்னி வெடியா வச்சா நான் எப்படிடா விருது வாங்குவேன் என புலம்பி வருகிறார் சங்கர்.

Trending News