ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கல்யாணம் முதல் தங்கை இறப்பு வரை.. லொள்ளு சபா பிரபலத்திற்கு உதவிய சந்தானம்

Santhanam : சந்தானத்தின் ஆரம்ப புள்ளி விஜய் டிவி தான். அதாவது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் சந்தானம் பிரபலமானார். இதைத்தொடர்ந்து தான் அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

லொள்ளு சபா பிரபலம் ஒருவருக்கு சந்தானம் தற்போது வரை உதவி வருகிறார். சமீபத்தில் லொள்ளு சபா தொடரில் நடித்த சேஷு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து மற்றொரு பிரபலமும் மோசமான உடல் நிலையில் இருக்கிறார்.

லொள்ளு சபா ஆண்டனி ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர். இப்போது உள்ள யூடியூப் வீடியோக்களில் வெளியாகும் ட்ரோலிலும் அவரை பயன்படுத்தி வருகிறார்கள். வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் உடல் நலகுறைவால் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

லொள்ளு சபா ஆண்டனிக்கு உதவிய சந்தானம்

அவருக்கு உடம்பில் தொற்று இருந்த நிலையில் திரவமாக உருவாகியுள்ளது. இது தீவிரம் அடைந்து சிறுநீரப்பை வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான சிகிச்சைக்கு சந்தானம், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் உதவி இருக்கிறார்களாம்.

குறிப்பாக சந்தானம் ஆண்டனியின் திருமணத்தின் போது 6 லட்சம் பணம் கொடுத்து உதவி செய்தாராம். அதன் பிறகு தாயாரின் சிகிச்சை, தங்கையின் இறப்பு ஆகிய இக்கட்டான சூழ்நிலைகளில் சந்தானம் உதவியதாக ஆண்டனி கூறியிருந்தார்.

மேலும் இப்போது மெடிக்கல் மிராக்கல் என்ற படத்தில் லொள்ளு சபா ஆண்டனி நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதன் பிறகு தனக்கு சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை உடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Trending News