திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாம்பைப் போல் கழுத்தை சுற்றிய கடன்.. தயாரிப்பாளர்களுக்கு கிடுக்கு பிடி போடும் சந்தானம்

சில வருடங்களுக்கு முன்பு வரை தன்னுடைய அட்டகாசமான காமெடியால் புகழின் உச்சியில் இருந்த சந்தானம் இப்போது சற்று தளர்ந்து போய் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவர் போடும் கண்டிஷன் தான் இதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகள் முற்றிலும் குறைந்து போய் உள்ளது.

இருந்தாலும் தலைகீழாகத்தான் குதிப்பேன் என்ற ரீதியில் அவர் ஹீரோவாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படங்களையும் இவரே தயாரித்தும் வருகிறார். மேலும் இவர் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவந்தாலும் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. இதனால் சொந்த தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சந்தானம் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளார்.

Also read: மைக் செட் ஸ்ரீராம் உடன் கூட்டணி போடும் சந்தானம்.. கடன் தொல்லையால் பினாமியாக மாறிய நிலை

அதனாலேயே இப்போது அவர் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார். அதாவது இப்போதும் அவரை தேடி காமெடி வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. சந்தானம்தான் அதை தட்டி கழித்து வந்தார். இப்போது அதை ஏற்கும் மனநிலைக்கு அவர் வந்து விட்டாராம். ஆனால் அதில் தான் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

என்னவென்றால் அவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ஐந்து கோடி வரை சம்பளமாக கேட்கிறாராம். அது மட்டுமல்லாமல் 50 லட்சம் ரூபாயை அட்வான்ஸ் ஆக கொடுக்க வேண்டுமாம். அப்படி கொடுத்தால் அந்த தயாரிப்பாளர் இரண்டு வருட காலம் காத்திருந்தால் சந்தானம் அவர் படத்தில் நடித்து கொடுப்பாராம். இப்படி ஒரு கண்டிஷனை தான் அவர் போட்டு வருகிறார்.

Also read: யூகிக்க முடியாத சூப்பர் ஹிட் பட கதையில் சசிகுமார்.. சந்தானம் சொன்ன மாதிரி பொங்கலுக்கு வடகறி தான்

இதற்கு தயாரிப்பாளர் மறுக்கும் பட்சத்தில் ஐந்து கோடியையும் உடனே கொடுத்து விட்டால் சந்தானம் கால் சூட் தருவதற்கு தயாராக இருக்கிறாராம். இவ்வாறு அவர் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களை எல்லாம் தெறித்து ஓடும் அளவுக்கு கண்டிஷன்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் எக்காரணம் கொண்டும் அவர் இதில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள மாட்டாராம்.

அந்த அளவுக்கு அவருடைய கடன் கழுத்தை சுத்திய பாம்பாக மாறி இருக்கிறது. அதன் காரணமாகவே சந்தானம் இப்படி ஒரு அதிரடியில் இறங்கி இருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்கள் தான் நொந்து போய் இருக்கின்றனர். மேலும் எந்த தைரியத்தில் இவரை நம்பி மொத்த பணத்தையும் கொடுப்பது என்றும் அவர்கள் பயப்படுகிறார்கள். அந்த வகையில் சந்தானம் தன்னுடைய கடனுக்காக தயாரிப்பாளர்களிடம் போட்டுள்ள இந்த கிடுக்குப்பிடி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Also read: அடுத்தடுத்த தோல்வியால் சிக்கி தவிக்கும் சந்தானம்.. ஏஜென்ட் கண்ணாயிரம் இதில இருந்து தப்புமா?

Trending News