ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

Inga Naan Thaan Kingu: சிரிப்புக்கு கேரண்டி கொடுத்த சந்தானம்.. இங்க நான் தான் கிங்கு எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

Inga Naan Thaan Kingu: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு இன்று வெளியாகி உள்ளது. அன்புச் செழியன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

inga naan than kingu
inga naan than kingu

பிரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

review
review

அதில் சந்தானம், தம்பி ராமையா காம்போ வேற லெவலில் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் முதல் பாதி காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் நகர்கிறது.

twitter review
twitter review

அதைத்தொடர்ந்து இரண்டாம் பாதியும் கலகலக்க வைத்திருக்கிறது. அதேபோல் சந்தானம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பயங்கர காமெடி அலப்பறை செய்திருக்கிறார்.

review
review

மேலும் இமானின் பின்னணி இசை, பாடல்கள் என ஒவ்வொன்றும் ரசிக்க வைத்துள்ளது. அதனாலேயே இப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

review
review

அதுமட்டுமின்றி சந்தானம் செய்த ப்ரோமோஷனும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஆக மொத்தம் இந்த சம்மர் ட்ரீட் ஆக வந்திருக்கும் இங்க நான் தான் கிங்கு வசூல் சாதனை செய்யுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News