வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தலைக்கணத்தில் ஆடும் சந்தானம்.. வளர்த்து விட்டவரை ஒதுக்கி தள்ளும் ஆணவம்

காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் சந்தானம், தனது டிராக்கை மாற்றிக்கொண்டு ஹீரோவாக பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவர் ஹீரோவானது விபத்தான ஒரு காரியம் என்றாலும் அதிலும், ஒரு சில படங்களில் ஹிட் கொடுத்து நானும் ஒரு ஹீரோதான் என்று தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் அவருக்கு என பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இவரின் காமெடிக்காகவே இயக்குனர்கள் இவரை வைத்து படம் எடுக்கலாம் என்று பல கதைகளை, அவர் கண்முன்னே காட்டினாலும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறாராம் சந்தானம்.

இப்படி இருக்கக்கூடிய சமயத்தில், அவர் ஹீரோவாக அறிமுகமான பிறகு மிகப்பெரிய ஒரு ஹிட் கொடுத்த படம் என்றால் அது தில்லுக்குதுட்டு தான். இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ராம்பாலா சந்தானத்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர். இந்தப்படத்தின் ஹிட்டை தொடர்ந்து அடுத்தடுத்து தில்லுக்குதுட்டு பாகம் 2 என்ற படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார்.

மேலும் சந்தனத்தின் ஆரம்பத்தில் அவர் ஆதி எடுத்து வைத்த முதல் படியும், அவர் சினிமாவுக்குள் நுழைய காரணமாக அமைந்த, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா எனும் வெற்றிகரமான நிகழ்ச்சியை இயக்கியவரும் இந்த இயக்குனர் ராம்பாலா தான். அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக திரைத்துறையில் சந்தானம் கால் பதித்தபோது அவரை தூக்கி விட நினைத்து தில்லுக்குதுட்டு மற்றும் தில்லுக்குதுட்டு2 என்ற இரண்டு படங்களை கொடுத்து சந்தானத்தின் திரைப்பயணத்தில் மிக முக்கிய காரணமாக அமைந்து இருந்தார்.

இந்த இரண்டு படங்களும் காமெடி திரைப்படங்களாக அமைந்திருந்ததால் வசூலிலும் நல்ல சாதனை படைத்தது. சந்தானம் ராம்பாலா காம்பினேஷன் நன்றாக இருக்கிறது என்று சினிமா வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டது. இந்த காம்பினேஷனில் தொடர்ந்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தில்லுக்குதுட்டு பாகம் 3 எடுக்கலாம் என்ற முடிவை இயக்குனர் ராம்பாலா எடுத்திருக்கிறார். அதற்கான வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் போது சந்தானம் திடீரென நீங்கள் இந்த படத்தை இயக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

இயக்குனர் ராம் பாலாவிற்கும், சந்தானத்திற்கும் இடையே ஏற்கனவே ஏதோ ஒரு பிரச்சனை பணிப்போர் ஆக சென்று கொண்டிருக்கிறதாம். அதனால் அந்தப் பனிப்போர் தான் தற்போது சந்தானத்தின் இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த இயக்குனரை அதுவும் தன்னுடைய ஆரம்பக் காலகட்டத்தில் இருந்து சினிமாவில் தூக்கிவிட நினைத்து தற்போது அவருக்கு உறுதுணையாக நின்ற இயக்குனரை சந்தானம் இப்படி ஒதுக்கி வருவது சரியா என்று பல தரப்பில் இருந்தும் ரசிகர்கள் கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.

சந்தானம் காமெடி நடிகராக இருந்த போது இருந்ததைவிட கதாநாயகனாக மாறிய பிறகு திரையில் என்ன மாறினாரோ தெரியவில்லை. ஆனால்,சமீபத்தில் அவரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது நிஜத்தில் அவர் ஹீரோவாக இன்னும் ஆகவில்லை என்று தான் தோன்றுகிறது. தேவையில்லாத இடங்களில் வாயை கொடுத்து மாட்டிக் கொள்கிறார். இதுபோன்று தூக்கிவிட்டவர்களை மதிக்காமல் செல்லும் போக்கு என சந்தானம் மிகப்பெரிய சிக்கலை சந்திப்பார் என்றுதான் சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

Trending News