திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

செந்தில் கவுண்டமணி காமெடி வசனங்களை டைட்டிலாக்கும் சந்தானம்.. தொடர் பிளாப்புக்கு பிறகும் தைரியமாக எடுத்த முடிவு

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களாக வலம் வந்தவர்கள் செந்தில் மற்றும் கவுண்டமணி. இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்திருந்தால் அந்த படம் 75% ஹிட்டு தான். அதுமட்டுமின்றி அப்போதைய காலகட்டத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயின் கால்ஷீட் கூட கிடைத்து விடும்.

ஆனால் கவுண்டமணி மற்றும் செந்தில் கால்ஷீட்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக பல காமெடி நடிகர்கள் வந்தாலும் சந்தானத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இப்போது காமெடியை கைவிட்டு விட்டு ஹீரோவாக சந்தானம் நடித்து வருகிறார்.

Also Read : தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த 5 நடிகர்கள்.. சந்தானத்தால் தலையில் துண்டு போட்ட விஜய் பட நண்பர்

இந்நிலையில் சந்தானத்தின் பட டைட்டில்கள் செந்தில், கவுண்டமணி வசனங்களாக இடம் பெற்றது. அதாவது ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி, செந்தில் இடையே ஆன நகைச்சுவை காட்சியில் டிக்கிலோனா என்ற வசனம் இடம் பெறும். இதை தனது படத்தின் டைட்டிலாக சந்தானம் வைத்திருந்தார். ஆனால் டிக்கிலோனா படம் படு தோல்வியை சந்தித்தது.

சென்டிமெண்டாக செந்தில், காமெடி வசனங்கள் சந்தானத்திற்கு ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் மீண்டும் தைரியமாக ஒரு முடிவெடுத்துள்ளார். அதாவது பிரபு நடிப்பில் வெளியான உத்தமராசா படத்தில் கவுண்டமணி, செந்தில் இடையே வடக்குப்பட்டி ராமசாமி என்ற வசனம் இடபெறும். இப்போது வடக்குப்பட்டி ராமசாமி என்ற டைட்டில் சந்தானம் நடிக்கவிருக்கிறார்.

Also Read : சிவகார்த்திகேயன் போல் மாட்டிக்கொண்டு முழிக்கும் சந்தானம்.. பழைய ரூட்டை கையில் எடுத்த கொடுமை

இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் போஸ்டரை சந்தானம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஏற்கனவே சந்தானத்தின் டிக்கிலோனா படத்தையும் கார்த்திக் யோகி தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வடக்குப்பட்டி ராமசாமி ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

டிக்கிலோனா தான் சந்தானத்திற்கு காலை வாரி விட்டாலும் வடக்குப்பட்டி ராமசாமி வெற்றி தரும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இப்போது கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் காமெடி கதாபாத்திரங்களும் நடிக்க சந்தானம் முன்வந்துள்ளார். அதன்படி ஏகே 62 படத்தில் சந்தானம் நடிக்கவிருக்கிறார்.

santhanam-vadakkupatti-ramasamy

Also Read : கனவுக்காக வைராக்கியத்தை கைவிட்ட சந்தானம்.. AK 62 அஜித்துடன் நடிக்க இப்படி ஒரு காரணமா?

Trending News