திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஹீரோயிசத்தை கைவிட்ட சந்தானம்.. மாஸ் ஹீரோ படத்தில் மீண்டும் காமெடி ரோல்

சந்தானம் காமெடி நடிகராக இருந்த வரைக்கும் அவரது மார்க்கெட் உச்சகத்தில் இருந்தது. அந்த காலகட்டத்தில் வெளியான எந்த படங்களிலுமே காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் தான் நடித்து வந்தார். மேலும் அப்போது ஹீரோக்களின் கால்ஷீட் கூட கிடைத்துவிடும், சந்தானத்தின் கால்ஷீடுக்காக இயக்குனர்கள் காத்திருப்பார்கள்.

அதுமட்டுமின்றி சில படங்களில் ஹீரோ கதாபாத்திரத்தை விட இவருடைய கதாபாத்திரத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இப்படி கொடிகட்டி பறந்த சந்தானத்தின் மார்க்கெட் சரிவதற்கான காரணம் சிலரின் பேச்சைக் கேட்டு நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம்பிடித்ததின் விளைவு தான்.

Also Read : படம் ஓடலைன்னாலும் மாஸ் காட்டும் சந்தானம்.. நயன்தாராவை அடுத்து போயஸ் கார்டனில் பல கோடியில் வீடு

அதாவது ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்த படங்கள் திரையரங்குகளில் ஓரளவு ஓடினாலும் சமீபகாலமாக படுதோல்வி அடைந்து வருகிறது. சந்தானம் நடிப்பில் வெளியான குளுகுளு படம் வந்ததே தெரியாத அளவுக்கு தியேட்டரில் ஓடி சென்றது. மேலும் இனி காமெடி இல்லாமல் முழு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று சந்தானம் முடிவெடுத்து நடித்த படம் தான் ஏஜென்ட் கண்ணாயிரம்.

ஆனால் இந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இப்போது மீண்டும் பழைய ரூட்டை கையில் எடுத்துள்ளார். அதாவது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க சந்தானம் முடிவெடுத்துள்ளார். அதுவும் முதலில் அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள ஏகே 62 படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கவிருக்கிறாராம்.

Also Read : சந்தானம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த 5 நடிகர்கள்.. லொள்ளு சபாவில் இருந்து தொடரும் நட்பு

சமீபத்தில் இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இப்போது சந்தானமும் இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி சந்தானம் பழையபடி காமெடி ரோலில் நடிப்பது அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் இப்போது சமீபகாலமாக காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

காமெடி நடிகர் ஹீரோக்களாக நடித்து வந்த நிலையில் அது செட்டாகவில்லை என இப்போது வடிவேலு, சந்தானம் போன்றோர் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்துள்ளனர். மேலும் விரைவில் சந்தானம் ஏகே 62 படத்தில் இணைந்துள்ள செய்தி அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியாகும்.

Also Read : அடுத்தடுத்த தோல்வியால் சிக்கி தவிக்கும் சந்தானம்.. ஏஜென்ட் கண்ணாயிரம் இதில இருந்து தப்புமா?

Trending News