DD Returns Movie Review: பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் இன்று டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஹாரர் காமெடி கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தானத்தின் கவுண்டர் காமெடி, அலப்பறை என இப்படம் முதல் நாளிலேயே பாசிட்டி விமர்சனங்களை குவித்து கொண்டிருக்கிறது. படத்தை பார்த்த பலரும் பக்கா என்டர்டெயின்மென்ட்டாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.
முன்பு ஒரு காலத்தில் பாண்டிச்சேரியில் இருக்கும் பங்களாவில் ஒரு கும்பல் சூதாட்டம் நடத்தி வருகிறது. அவர்களின் அடாவடியை பொறுக்க முடியாத மக்கள் அவர்களை உயிரோடு எரித்து கொல்கின்றனர். இந்த கதை அப்படியே நிகழ்காலத்திற்கு வருகிறது. தன் காதலியின் பிரச்சனையை தீர்க்க சந்தானத்திற்கு பணம் தேவைப்படுகிறது.
அப்படி அவர் கைக்கு கிடைக்கும் பணம் அந்த பங்களாவில் மாட்டிக் கொள்கிறது. அதை எடுக்க காதலியுடன் செல்லும் சந்தானம் அங்கு பேயிடம் சிக்கி கொள்கிறார். அப்போது பேய் நடத்தும் கேமில் வெற்றி பெற்றால் தான் பணம் கிடைக்கும் என்ற சூழல் உருவாகிறது. அந்தப் போட்டியில் சந்தானம் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
Also read: ஒரு ரூபாய் கூட குறைக்காத சந்தானம்.. டிடி ரிட்டன்ஸ் படத்துக்கு வாங்கிய சம்பள தொகை
கடந்த சில தோல்விகளுக்கு பிறகு மீண்டும் வந்திருக்கும் சந்தானம் இப்படத்தின் மூலம் மிகப்பெரும் கம்பேக் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். வழக்கமான பாணியில் அவருடைய காமெடி வசனங்களும், நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. அவர் மட்டுமல்லாமல் படத்தில் நடித்திருக்கும் பல நடிகர்களும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் எல்லாருக்கும் காட்சிகளை கொடுத்து சரியாக பயன்படுத்தி இருக்கிறார். வழக்கமாக பேய் படங்கள் பார்ப்பவர்களை கொலை நடுங்க வைக்கும். ஆனால் பேய்களை ட்ரோல் செய்து வரும் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு சீரிஸ் இதிலும் தொடர்ந்துள்ளது. அதிலும் பல வசனங்கள் பட்டையை கிளப்புகிறது.
இப்படி படத்தில் பல நிறைகள் இருந்தாலும் சில லாஜிக் மீறல்கள், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாதது போன்ற குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. இதையெல்லாம் தவிர்த்து விட்டு பார்த்தால் நிச்சயம் தியேட்டரில் ரிலாக்ஸாக பார்க்கக்கூடிய ஒரு படம் தான் இந்த டிடி ரிட்டர்ன்ஸ். அந்த வகையில் இந்த பேய் கான்செப்ட் சந்தானத்திற்கு வழக்கம்போல் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5