Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இந்தியன் 2 ஷங்கர் படமே இல்ல.. படம் எடுக்கும்போது தூங்கிட்டாரா? சரண்ராஜ் விளாசல்

இந்தியன் 2 ஷங்கர் படமே இல்ல.. படம் எடுக்கும்போது தூங்கிட்டாரா? சரண்ராஜ் விளாசல்

ஷங்கரின் இந்தியன் 2 படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வரை விமர்சனங்கள் ஓயாது போலருக்கு. தியேட்டரில் வந்தவுடன் படத்தை கிழித்தார்கள். இப்போ ஓடிடியில் வெளிவந்த உடனேயே படத்தை மக்கள் டார் டாராக கிழித்து தொங்கவிட்டார்கள். தொலைக்காட்சியில் வெளியானால் குடும்பத்தோட சேர்ந்து […]

ஷங்கரின் இந்தியன் 2 படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வரை விமர்சனங்கள் ஓயாது போலருக்கு. தியேட்டரில் வந்தவுடன் படத்தை கிழித்தார்கள். இப்போ ஓடிடியில் வெளிவந்த உடனேயே படத்தை மக்கள் டார் டாராக கிழித்து தொங்கவிட்டார்கள்.

தொலைக்காட்சியில் வெளியானால் குடும்பத்தோட சேர்ந்து செய்ய போறானுங்க என்பது உறுதியாகிவிட்டது. தற்பொழுது கூடுதலாக தன் பங்குக்கு கூடுதலாக வச்சி செஞ்சிவிட்டார் நடிகர் சரண்ராஜ்.

சரண்ராஜ் இயக்கத்தில் வெளிவரப்போகும் குப்பன் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சமீத்தில் நடந்தது. அதில் சரண்ராஜின் தேவ், ஆதி என இரண்டு மகன்களும் நடிக்கிறார்கள். அதில் பேசிய சரண்ராஜ் இந்தியன் 2 படத்தை பற்றி தனது கருத்தை கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

விழாவில் பேசிய சரண்ராஜ் ‘ சமீபத்தில் இந்தியன் 2 படத்தை பார்த்தேன் சத்தியமாக ஒரு சீன் கூட ஷங்கர் படம் மாதிரி இல்லை. படம் எடுக்குறப்ப அவர் தூங்கிட்டாரா? ஒரு வசனம் கூட நல்ல இல்லை என தோணுது என்று ஒரு குண்டை போட்டு விட்டார்.

உடனே ஒரு பத்திரிகையாளர் இப்படி பொது வெளியில் சொல்லலாமா என்று கூறியதற்கு ” ஷங்கரிடம் நிறைய படம் வேலை செஞ்சிருக்கேன் அவர் எங்கள் வீட்டு பையன். ஆனாலும் உண்மையா சொல்லுங்க அந்த படம் ஷங்கர் படம் மாதிரியே இருந்துச்சா? என கேள்வி கேட்டார்.

ஷங்கர் படம் அனைத்தும் எனக்கு பிடிக்கும் ஆனால் இது ஷங்கர் எடுக்கவில்லை என கூறினார். இவர் ஷங்கர் இயக்கத்தில் ஜென்டில்மேன் படத்தில் மொட்டை அடித்து முரட்டு நடிப்பில் பின்னி பெடல் எடுத்தவர்.

இந்த விமர்சனத்தை ஷங்கர் சாதாரணமாக நினைக்காமல் கருத்தில் கொண்டு அடுத்த படத்தை ஒழுங்கா கவனம் செலுத்தினால் தப்பித்தார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.