வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

60 வயதில் 3வது திருமணத்திற்கு ரெடியான சரத் பாபு.. அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடித்து மிகப்பெரும் ஜாம்பவானாக இருந்த நடிகர் சரத்பாபு சமீபத்தில் உடல் நல குறைவு காரணமாக உயிர் நீத்தார். அதைத்தொடர்ந்து அவருடைய திரை வாழ்வு மற்றும் தனிப்பட்ட வாழ்வு குறித்த செய்திகள் அதிகமாக வெளிவந்து ட்ரெண்ட்டாகி கொண்டு இருக்கிறது.

அதிலும் அவருடைய இரண்டு திருமண முறிவு பற்றிய செய்தி தான் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய 60வது வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள இருந்தது அப்போதைய நாளில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சொல்லப்போனால் தன்னுடைய இரண்டாவது விவாகரத்திற்கு பிறகு தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

Also read: இறுதிவரை ஜென்டில்மேன் ஆக வாழ்ந்த மனுஷன்.. சரத்பாபுவின் உடலை பார்த்து கதறிய மனைவிகள்

மேலும் இளம் பெண் ஒருவரை தான் அவர் திருமணம் செய்து கொள்ள இருந்தாராம். இது பற்றி செய்திகள் வெளிவந்த போது கூட அவர் எனக்கு ஒன்றும் வயதாகிவிடவில்லை, நான் மனதால் இளமையாக தான் இருக்கிறேன் என்று கூறி பலரின் வாயையும் அடைத்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த சமயத்தில் தான் சரத் பாபுவும், நமீதாவும் ஒன்றாக இருந்த போட்டோ மீடியாவில் வெளியானது.

ஏற்கனவே அவர் மூன்றாவது திருமணம் என்று சொன்னதால் நமீதா தான் அந்த பெண் என முடிவு கட்டி பல பத்திரிகைகளும் செய்தியை வெளியிட்டது. இது பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திய நிலையில் இதனால் டென்ஷன் ஆன சரத்பாபு இந்த செய்தி வெறும் வதந்தி தான், அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று கூறினார்.

Also read: மரணப் படுக்கையில் சரத்பாபு வாங்கிய கடைசி சத்தியம்.. உயிர் பிரிந்தும் கண்கலங்க வைத்த எஜமான்

மேலும் ஒரு விழாவில் தான் நான் நமிதாவை சந்தித்தேன். மற்றபடி அவரைப் பற்றி எனக்கு வேறு எதுவும் தெரியாது என்றும் தெளிவுப்படுத்தினார். அதன் பிறகு இந்த பிரச்சனை ஓரளவு ஓய்ந்தது. இருந்தாலும் அவருடைய மூன்றாவது திருமணம் யாருடன் நடக்கும் என பல மீடியாக்களும் உன்னிப்பாக கவனித்து வந்தது.

ஆனால் வருடங்கள் கடந்த பிறகும் அப்படி ஒரு சம்பவம் மட்டும் நடக்கவே இல்லை. அந்த வகையில் சரத் பாபு சிக்கிய மிகப்பெரிய சர்ச்சை என்றால் அது இந்த மூன்றாவது திருமணம் பற்றிய செய்தி தான். பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் தன்னுடைய வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு தனிமையில் காலத்தை கழித்தது குறிப்பிடத்தக்கது.

Also read: ரஜினியை அடிக்கடி சொல்லும்படி சரத்பாபு கேட்ட டயலாக்.. சூப்பர் ஸ்டார் மாஸ் காட்டிய கேரக்டர் ஆச்சே

Trending News