வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என்னது சரத் பாபு நடித்த கடைசி படம் போர் தொழிலா.? அதிர்ச்சியில் உறைய வைத்த கதாபாத்திரம்

Actor Sarathbabu : சமீபத்தில் தமிழ் சினிமா பிரபலங்களின் அடுத்தடுத்த மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது தான் சரத் பாபுவின் மரணம். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பழமொழி படங்களில் நடித்த சரத் பாபுவை பற்றி அறியாத பல விஷயங்கள் அவர் இறந்ததற்கு பின்பு இணையத்தில் உலாவ தொடங்கியது.

இதுவே அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வரச் செய்தது. இந்நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டை பெற்று வரும் போர் தொழில் படத்தில் சரத் பாபு நடித்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக சரத் பாபு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தான் இதுவரை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

Also Read : சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பு அபாரம்.. போர் தொழில் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

ஆனால் கடைசியாக அவர் நடித்த கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. அதாவது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா, சரத்பாபு ஆகியோர் நடிப்பில் போர் தொழில் படம் வெளியாகி இருந்தது. இப்படம் சீரியல் கில்லராக எடுக்கப்பட்டிருந்தது. இதில் சரத்பாபுவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்படுகிறது.

அதாவது ராட்சசன் படத்தில் நம்மை எப்படி கிறிஸ்டோபர் கதாபாத்திரம் உறைய வைத்ததோ, அதற்கு ஒரு படி மேலாகவே போர் தொழில் படத்தில் சரத் பாபு மிரளச் செய்துள்ளார். இளம் வயதில் இருந்தே சீரியல் கில்லர் அதாவது சைக்கோ கொலையாளியாக சுற்றி திரிகிறார் சரத்பாபு. அவரது கொலைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது.

Also Read : Por Thozhil Movie Review – சீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்.. சரத்குமார், அசோக் செல்வனின் போர் தொழில் முழு விமர்சனம்

போலீஸ் அதிகாரிகள் முதல் சிஐடி வரை கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறடிக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் சிலிர்க்கும்படியான நடிப்பை கொடுத்திருக்கிறார் சரத் பாபு. இவருக்குள் இப்படி ஒரு முகம் இருக்கிறதா என்பதை சரியாக புரிந்து கொண்டு கையாண்டு உள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.

எப்போதுமே இதே மாதிரியான மென்மையான கதாபாத்திரங்களில் நடித்த சரத்பாபுவை நமக்கு வேறு ஒரு பரிமாணத்தில் காட்டி இருப்பதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். போர் தொழிலில் சீரியல் கில்லராக மாண்டுபோன சரத் பாபு இன்னும் சில காலம் இருந்தால் இதே போன்று வில்லனாக நடிக்க வாய்ப்பு கேட்டு இயக்குனர்கள் அவரிடம் மன்றாடி இருப்பார்கள். ஆனால் போர் தொழில் உடன் சரத் பாபுவின் திரை சகாப்தம் முடிந்துவிட்டது.

Also Read : கொடுத்த காசுக்கு திருப்தி, இந்த 7 விஷயங்களுக்காக போர் தொழில் பார்க்கலாம்.. பழுவேட்டரையரின் வெறித்தனம்!

Trending News