வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

துணிவு படம் பார்க்க சென்று உயிரிழந்த ரசிகர்.. அஜித் செய்யாததை செய்து காட்டிய வாரிசு நடிகர்

அஜித்தின் துணிவு படம் வெளி வருவதற்கு முன்னதாகவே அவரின் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. இந்நிலையில் இதை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆடிப்பாடி கொண்டாடி வந்தன. மேலும் அனைத்து தியேட்டர்களிலும் ஒரு விழாவைப் போல ரசிகர்கள் பேனர் ,கட் அவுட், மாலை என அனைத்தும் செய்து வந்தனர்.

இந்த படத்தில் முதல் காட்சி வெளியிடப்பட்டதே அடுத்து ரசிகர்கள் திரையரங்கை ஆக்கிரமிக்க தொடங்கினர். இதற்கிடையில் சென்னையில் பிரபலமான ரோகினி தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த அஜித் விஜய் ரசிகர்கள் மோதிக்கொண்டு பேனர்களை கிழித்தெறிந்தனர். இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் போலீசார் தடியடை நடத்தினர்.

Also read: துணிவை தொடர்ந்து வினோத்தின் அடுத்த படம்.. மாஸ் ஹீரோ உடன் கூட்டணி

இதையடுத்து ரோகிணி தியேட்டரில் துணிவு படம் பார்க்க வந்த சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த பரத் குமார் என்ற 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மாணவரின் குடும்பத்தை மிகவும் சோகத்துக்கு உள்ளாக்கியது. இவரின் தாயார் கண்ணீருக்கு ஆறுதல் சொல்வதற்கு கூட இப்பொழுது யாரும் இல்லாமல் கதறி அழுகிறார்.

இந்த படத்தை பார்க்க வந்த ரசிகனுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று அவரது நண்பர்கள் தனது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதை பார்த்து கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் இருந்து வருகிறார் அஜித். இது அஜித் ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது.

Also read: சுப்ரீம் பெருசா, சூப்பர் ஸ்டார் பெருசா.. கேள்வி கேட்டு வம்படியாக மாட்டிக்கொண்ட சரத்குமார்

உயிரிழந்த மாணவர் பரத் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார் சரத்குமார். இதைத்தொடர்ந்து இவர் செய்தியாளருக்கு பேட்டியளிக்கும் போது தான் ஒரு ரசிகரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் விதமாக வந்திருப்பதாக கூறினார். மேலும் அவர் குடும்பத்திற்கு தேவையான கல்வி உதவித் தொகையை தனது ரசிகர் மன்றம் மூலமாக வழங்கப்போவதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இது ரசிகரின் மிகுந்த ஆர்வத்தின் வெளிப்பாட்டின் காரணத்தினால் ஏற்பட்ட விளைவு. இது இனி வரும் காலங்களில் நடக்காதவாறு பார்த்துக் கொள்வது ஒவ்வொரு ரசிகரின் கடமை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் ஒருவிதத்தில் காரணமாக இருந்த அஜித் செய்யாததை நடிகர் சரத்குமார் செய்திருக்கிறார்.

Also read: ஒரு வாரம் கழித்து வாரிசுக்கு ஆட்டம் காட்டிய துணிவு.. ஆட்டநாயகனாக முன்னேறிய அஜித்

Trending News