சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குடும்பத்தோடு மோடியை சந்தித்த சரத்குமார், வைரல் போட்டோஸ்.. மோடியின் அடுத்த பிளானை போட்டுடைத்த ராதிகா

Varalakshmi marriage: நாட்டாமை வீடு வரலட்சுமி கல்யாணத்தால் களைகட்டி இருக்கிறது. ஒரு பக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் அடி கொஞ்சம் பலம் தான் என்றாலும், கல்யாண வேலையால் மறுபடியும் குஷி நிலைமைக்கு வந்து விட்டார்கள் சரத்குமார் மற்றும் ராதிகா ஜோடி. சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவி, வரலட்சுமி, பூஜா, ராதிகா, ராதிகாவின் மகள் ரேயான் என மொத்தமாக பத்திரிக்கை கொடுக்க கிளம்பி விட்டார்கள்.

திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் துறையை சேர்ந்தவர்கள் அத்தனை பேரையும் நேரில் குடும்பத்தோடு சந்தித்து சரத்குமார் பத்திரிகையை கொடுத்து வருகிறார். இது சம்பந்தப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வரலட்சுமி என் கல்யாண கொண்டாட்டம் தான் இப்போதைக்கு இணையதளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நேற்று சரத்குமார் தன்னுடைய குடும்பத்தோடு பிரதமர் மோடியை சந்தித்து பத்திரிக்கையை கொடுத்திருக்கிறார்.

மோடியின் அடுத்த பிளானை போட்டுடைத்த ராதிகா

நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக தான் சரத்குமார் தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை பிஜேபி உடன் இணைத்தார். அதற்கு பரிசாக ராதிகாவுக்கு விருதுநகர் தொகுதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

Sarathkumar family with modi
Sarathkumar family with modi

ஆனால் பாஜக கட்சி தமிழ்நாட்டில் பெரிய தோல்வியை அடைந்தது. இது மோடிக்கு மிகப்பெரிய மன வருத்தம் தான். இருந்தாலும் சரத்குமார் குடும்பத்தை மகிழ்ச்சியோடு மோடி வரவேற்று இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

Sarathkumar family with modi
Sarathkumar family with modi

நாடாளுமன்ற தேர்தல், பாஜக கட்சி நிர்வாகிகளின் செயல்முறைகள் என அத்தனையையும் சரத்குமார் மற்றும் ராதிகாவுடன் மோடி விவாதித்ததாக சரத் தன்னுடைய இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும் ராதிகாவிடம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலையையும் தொடங்க சொல்லி இருப்பதாக ராதிகா மீடியாவுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

Trending News