ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

என்னைப் போல உங்களையும் 150 வயது வரை வாழவைப்பேன்.. வாயிலே வடை சுட்ட சரத்குமார்

உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்கள் என்றால் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சொர்ப்பம் தான். அந்த வகையில் சிவக்குமார், சரத்குமார் போன்ற நடிகர்கள் இந்த வரிசையில் உள்ளனர். இப்போது இதுகுறித்து சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தன்னுடைய இளமையான தோற்றத்தை பற்றி பேசி இருக்கிறார்.

அதாவது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் சரத்குமார். இப்போது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் அவரின் தந்தையாக சரத்குமார் நடித்திருந்தார்.

Also Read : அரசியல் ஆசையால் சினிமாவில் பேரை தொலைத்த 4 நடிகர்கள்.. ரீ என்ட்ரி கொடுக்கும் சரத்குமார்

மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடித்திருந்தார். தொடர்ந்து அவரது நடிப்பில் ஒரு சில படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் அரசியல் மீது உள்ள ஆர்வத்தால் கடந்த 2007 ஆம் ஆண்டு சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார்.

எப்படியாவது அரசியலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற ஆசையில் சரத்குமார் உள்ளார். இந்நிலையில் பொதுக் கூட்டத்தில் சரத்குமார் பேசியது இப்போது ட்ரெண்டாகி வருகிறது. அதாவது தனக்கு இப்போது 69 வயது ஆகிறது, இப்போதும் இளமையாக 25 வயது இளைஞன் போல் இருக்கிறேன்.

Also Read : அண்ணன் தம்பிகளின் பாசத்தை உருக வைத்த 5 படங்கள்.. தங்கச்சியை ராணி மாதிரி கொண்டாடிய சரத்குமார்

அதுமட்டுமின்றி 150 வயது வரை நான் உயிரோடு இருப்பேன். மேலும் என்னை போல நீங்களும் இளமையுடனும், நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றால் ஒரு வித்தையை கற்றுக் கொடுப்பேன். அதற்கு நீங்கள் ஒன்று செய்ய வேண்டும் என்று சரத்குமார் பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.

அதாவது 2026 ஆம் ஆண்டு முதலமைச்சர் அரியணையில் என்னை அமர வைத்தால் இந்த ரகசியத்தை கூறுவேன் என்று வாயாலேயே வடை சுட்டுள்ளார். இதை கேட்டு ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்துள்ளனர். மேலும் சரத்குமார் ஒரு வித்யாசமான அரசியல்வாதி என நக்கல் அடித்தும் பலர் பேசி வருகிறார்கள்.

Also Read : 5 ரூபாய்க்கு கூட வழியில்லாமல் நடுரோட்டில் நின்ற சரத்குமார்.. காரணம் கேட்டா அதிர்ச்சி ஆயிடுவீங்க!

Trending News