வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தவறைத் திருத்திக் கொள்ளாமல் மேலும் தப்பு செய்யும் சரத்குமார்.. இதெல்லாம் ஒரு பொழப்பா பாஸ்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சரத்குமார். இப்போது விஜயின் வாரிசு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவை காட்டிலும் அரசியலிலும் தற்போது சரத்குமார் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார்.

அதாவது சமத்துவ மக்கள் கட்சியில் தலைவராக உள்ளார். இந்நிலையில் ரம்மி விளையாட்டுக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் சரத்குமார் இதை ஆதரிக்கும் விதமாக அந்த விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளையாட்டால் பல குடும்பங்கள் நடுரோட்டுக்கு வந்துள்ளது.

Also Read : சரத்குமார் முதல் மனைவி விவாகரத்து, ராதிகா காரணம் இல்ல.. இந்த நடிகை தானாம்

இப்படிப்பட்ட சூதாட்டத்தை சரத்குமார் எப்படி ஆதரித்தார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது குறித்து சரத்குமார் சொன்ன விஷயம் தான் பலருக்கும் ஆச்சரியத்தையும், சிரிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தான் செய்த தவறை மறைப்பதற்காக ஆன்லைன் ரம்மி விளையாட்டு ஒரு அற்புதமான விளையாட்டு என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடும் போது அறிவு கூர்மையாகும் அதனால் ரம்மி விளையாடுவதில் எந்த தவறும் இல்லை என்பது போல பேசுகின்றார். இது என்ன இப்படி சொல்லி இருக்கிறாரே என ஆச்சரியமாக இருந்தாலும் அடுத்ததாக அவர் சொன்னது தான் செம காமெடி.

Also Read : பழுவேட்டரையரை நெற்றி பொட்டில் அடித்தாற்போல் கேட்ட கேள்வி.. ஆவேசத்துடன் பதிலளித்த சரத்குமார்

அதாவது என்னுடைய சமத்துவ மக்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்றும் தான் நான் கூறினேன், என்னுடைய பேச்சைக் கேட்டு மக்கள் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லையே. இப்போது மட்டும் நான் ரம்மி விளையாடுங்கள் என்று சொன்னால் மக்கள் விளையாடுவார்களா என்று சரத்குமார் பேசியிருந்தார்.

ஒரு நடிகர் என்பதை காட்டிலும் தற்போது அரசியல்வாதியாக பத்திரிக்கையாளர் கேள்விக்கு சாதுரியமாக பதில் சொன்னாலும், மக்களுக்கு இப்படி ஒரு கருத்தை சொல்வது அரசியல் தலைவனுக்கு உகந்ததில்லை என பலரும் கூறி வருகிறார்கள். என்னதான் சொன்னாலும் எனக்கு பணம் தான் முக்கியம் என தொடர்ந்து சரத்குமார் இது போன்ற விளம்பரங்களில் நடித்து தான் வருகிறார்.

Also Read : சரத்குமார் கையில் இவ்வளவு படங்களா.? எல்லா திசையிலும் பறக்கும் கொடி

Trending News