ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

இனிமே சின்ராச கையில பிடிக்கவே முடியாது.. சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் 2-வுக்கு தயாராகும் சரத்குமார்

Actor Sarathkumar: 90 கால கட்ட சினிமாவில் ஹீரோவாக கலக்கி வந்த சரத்குமார் இப்போது வில்லன், குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டறையர் கேரக்டரில் நடித்திருந்த இவருக்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது.

அதை தொடர்ந்து இப்போது அவர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த சூழலில் இவர் நடிப்பில் 26 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு சூப்பர் ஹிட் படம் இப்போது இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறது என்ற தகவலை இவர் கொடுத்திருப்பது ரசிகர்களை சந்தோஷப்பட வைத்திருக்கிறது.

Also read: சித்தார்தின் டக்கரை பின்னுக்கு தள்ளிய சரத்குமார்.. 2வது நாள் வசூலில் அதிரடி காட்டும் போர் தொழில்

அந்த வகையில் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் தான் சூர்யவம்சம் . ஒட்டுமொத்த குடும்பங்களையும் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வர வைத்த பெருமை இப்படத்திற்கு உண்டு. அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஒரு காட்சியில் தேவயானி செய்யும் இட்லி உப்புமாவும் இன்று வரை ரொம்பவும் ஃபேமஸ்.

இன்னும் சொல்லப்போனால் அவசரத்திற்கு இந்த ரெசிபி தான் இல்லத்தரசிகளுக்கு கை கொடுக்கிறது. அப்படிப்பட்ட இந்த படத்தை இப்போது டிவியில் போட்டால் கூட முதல் முறை பார்ப்பது போன்ற குதூகலத்துடன் ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள். இதுவே படத்திற்கான மிகப்பெரிய வெற்றியாக இன்று வரை இருக்கிறது.

Also read: சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பு அபாரம்.. போர் தொழில் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அந்த வகையில் சரத்குமார் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இதன் இரண்டாம் பாகம் வரும் தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது, கலைத்துறை பயணத்தில் காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்று வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்டாட வைக்கும் குடும்ப திரைப்படமாக சூரியவம்சம் இருக்கிறது.

sarathkumar-tweet
sarathkumar-tweet

இப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் கடந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என அனைத்துக்கும் ஆதரவளித்து படத்தை வெற்றி அடைய வைத்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து விரைவில் சூர்யவம்சம் 2 என்ற குறிப்பையும் கொடுத்து அனைவரையும் திக்கு முக்காட செய்திருக்கிறார். அந்த வகையில் இனிமே சின்ராச கையிலயே பிடிக்க முடியாது என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Also read: கொலைகாரன் எப்படிப்பட்டவன், அவன் பண்ண கொலையை படிக்கணும்.. சரத்குமார் மிரட்டும் போர் தொழில் ட்ரெய்லர்

Trending News