வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சரத்குமார், சத்யராஜ் வில்லனில் இருந்து ஹீரோவாக மாறினாங்க.. ஆனா ஹீரோவாக இருந்து விலனாக மிரட்டிய ஒரே நடிகர்

சினிமாவில் பொதுவாக ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு தான் பல நடிகர்கள் களமிறங்குகிறார்கள். இதற்காக ஆரம்பத்தில் குணச்சித்திரம், வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அதன் பின்பு ஹீரோவாக நிலைத்து நின்றுள்ளனர்.

தற்போது சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி சரத்குமார், சத்யராஜ், பாக்யராஜ் போன்ற நடிகர்களும் வில்லனாக நடித்த அதன் பின்பு ஹீரோவாக வலம் வந்தனர்.

Also Read :சத்யராஜ் என்றாலே நினைவுக்கு வரும் 6 வசனங்கள்.. என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்க!

ஆனால் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்த விட்டு அதன் பின்பு வில்லனாக நடித்தவர்கள் சிலர் மட்டும்தான். எஸ் ஜே சூர்யா, வினய், பிரசன்னா, பாபி சிம்ஹா போன்றோர் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தாலும் தற்போது விலனாக மிரட்டி வருகிறார்கள்.

இவர்களுக்கு மார்க்கெட் இல்லாத காரணத்தினால் வேறு வழியின்றி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால் ஹீரோவாக உச்சத்தில் இருக்கும்போதே விஜய் சேதுபதி மட்டும் துணிச்சலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு தற்போது கலக்கி கொண்டிருக்கிறார்.

Also Read :விஜய் சேதுபதி கட்டுப்பாட்டிலிருக்கும் 3 நடிகைகள்.. 9 படங்களில் ஒன்றாக நடித்த அதிர்ஷ்டசாலி

பேட்ட, மாஸ்டர், விக்ரம் என இவர் வில்லனாக நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டு தான். அதுமட்டுமின்றி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் வில்லனாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். ஹீரோ இமேஜ் இருக்கும்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மற்ற நடிகர்கள் தயங்குவார்கள்.

ஆனால் சற்றும் யோசிக்காமல் விஜய் சேதுபதி துணிச்சலாக எடுத்த முடிவு தற்போது அவரை வேறு தரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மேலும் விஜய் சேதுபதியை எடுத்துக்காட்டாக கொண்டு டாப் நடிகர்கள் தற்போது வில்லனாக நடிக்க ஆரம்பத்துள்ளனர். முதற்கட்டமாக சூர்யா விக்ரம் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Also Read :ஷாருக்கான் கூட நடிக்க விஜய் சேதுபதி கேட்ட சம்பளம்.. ஆடிப்போன அட்லி

Trending News