புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சுப்ரீம் பெருசா, சூப்பர் ஸ்டார் பெருசா.. கேள்வி கேட்டு வம்படியாக மாட்டிக்கொண்ட சரத்குமார்

விஜயின் வாரிசு படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் கலந்துக்கொண்டு அந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அப்போது மேடையேறி பேசிய ஒவ்வொரு பிரபலங்களும் விஜயை தாறுமாறாக புகழ்ந்து தள்ளினர்.

அதிலும் நடிகர் விஜய் தனக்கு எதிரி நான் தான் என அஜித்தை ஜாடை மாடையாக இழுத்து பேசினார். இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், விஜயின் பேச்சுக்கு சமமாக சரத்குமாரின் பேச்சு இன்னும் இணையத்தில் வைரலானது. விஜய் தான் நம்பர் ஒன் என்றும், அவர்தான் சூப்பர்ஸ்டார் என்றும் சரத்குமாரின் பேசிய பேச்சு ஒட்டு மொத்த ரஜினி ரசிகர்களையும் கோபத்தில் ஆழ்த்தியது.

Also Read: தில் ராஜ் மீது கோபத்தில் இருக்கும் விஜய்.. வாரிசு படத்தால் ஏற்பட்ட மனஸ்தாபம்

இதன் காரணமாக சரத்குமாரின் வீடு தேடி சென்ற ரஜினியின் ரசிகர்கள், வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் சரத்குமார் பயந்து மன்னிப்பு எல்லாம் கேட்ட பின் பிரச்சனை இன்னும் சூடுப் பிடிக்க தொடங்கியது. விஜய் ஏன் சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார், ஏன் சரத்குமார் அவரை அப்படி சொல்ல வேண்டும் என இணையத்தில் விவாதமே நடந்து வருகிறது.

இதனிடையே வாரிசு படத்தின் வெற்றிவிழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் விஜயை தவிர படத்தில் நடித்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர். இதனிடையே அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் சரத்குமார், வெளியில் தன் காரில் ஏற சென்ற போது பத்திரிக்கையாளர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டார்.

Also Read: வாரிசு, துணிவு எல்லாம் சும்மா டிரெய்லர் தான்.. மீண்டும் மோதும் விஜய், அஜித்

அப்போது பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் என் நீங்கள் விஜயை சூப்பர்ஸ்டார் என்று சொன்னீர்கள் என்ற கேள்விக்கு, செம காண்டாகி, நான் சொன்னதை உலகத்திலேயே மிகப்பெரிய பிரச்சனை போல பெருசு பண்ணாமல் இருங்கள் என்று கூறினார். மேலும் சூப்பர்ஸ்டார் என்பது ஒரு டைட்டில், நான் என் மகனுக்கு சூப்பர்ஸ்டார்,என் தந்தை எனக்கு சூப்பர்ஸ்டார் என்று புதிய விளக்கம் ஒன்றை கொடுத்தார் சரத்குமார்.

மேலும் பேசிய அவர், நான் விஜயை அடுத்த முதலமைச்சர் என்றோ, பிரதமர் என்றோ சொல்லவில்லை என்றும் சூப்பர் பெருசா, சுப்ரீம் பெருசா எனவும் சமாளித்தார். உடனே பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களது சுப்ரீம் ஸ்டார் பட்டத்தை வேறு யாருக்காவது கொடுத்தால் உங்களுக்கு ஓகேவா என கேட்க, தாராளமாக கொடுங்கள் எனக்கு ரொம்ப சந்தோஷம் என தெரிவித்தார். பின்னர் வரும் 24 ஆம் தேதி இதுகுறித்து விளக்கமாக தான் பேசுவதாக சரத்குமார் தெரிவித்து புறப்பட்டு சென்றார்.

Also Read: பாக்ஸ் ஆபிஸை திணறடித்த 5ம் நாள் மொத்த வசூல்.. தொடர் விடுமுறையில் அடித்து நொறுக்கும் வாரிசு

Trending News