சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சரத்குமார் விடாமல் துரத்திய 5 நடிகைகள்.. திருமணம் என்றதும், அல்வா கொடுத்த 3 பேர்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். இவர் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு, ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். சரத்குமார் தன்னுடைய கட்டுமஸ்தான உடம்பால் அதிக பெண் ரசிகர்கள் பெற்றிருந்தார். இந்நிலையில் சரத்குமார் தன்னுடன் நடித்த நடிகைகளை காதலித்துள்ளார் என்ற மொத்த லிஸ்ட்டை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார்.

சாயாதேவி : சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவியை 1984 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் என்ற இரண்டு பெண் குழந்தை உள்ளது. அதன் பிறகு இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2000 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

தேவயானி : சரத்குமார், தேவயானி இருவரும் இணைந்து அதிக படங்கள் நடித்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் இடையே பல கிசுகிசுக்கள் வர தொடங்கியது. அதன்பிறகு தேவயானி மேல் சரத்குமாருக்கு காதல் ஏற்பட்டது. இதனால் தேவயானியின் பெற்றோரிடம் பெண் கேட்க சென்றுள்ளார் சரத்குமார். ஆனால் ஏற்கனவே சரத்குமாருக்கு திருமணம் ஆனதை காரணம் காட்டி தேவயானியின் பெற்றோர் நிராகரித்துவிட்டனர்.

ஹீரா : நம்ம அம்மாச்சி என்ற படத்தில் சரத்குமார் மற்றும் ஹீரா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் ஹீரோவுடன் சரத்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு சரத்குமார் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

நக்மா : சரத்குமார், நக்மா இருவரும் ரகசிய போலீஸ் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் நக்மாவிற்கு பண ரீதியாக நிறைய உதவிகள் செய்துள்ளார் சரத்குமார். நக்மாவை வைத்து வெளிநாட்டிலேயே ஒரு படம் முழுவதும் படப்பிடிப்பு நடத்தி மிக பொருட்செலவில் ஒரு படத்தை தயாரித்தார். ஆனால் அப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து சரத்குமார் நக்மா இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

ராதிகா : சரத்குமாரின் இரண்டாவது மனைவி தான் நடிகை ராதிகா. இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். சரத்குமார் மிகுந்த பண நெருக்கடியில் உள்ள போது ராதிகா அவருக்கு உதவி செய்துள்ளார். அதன்பிறகு நட்பாக பழகி வந்த இருவரும் காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது வரை இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

Trending News