வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

கதையின் நாயகனாக அவதரித்த சரத்குமார்.. செகண்ட் இன்னிங்ஸில் கெட்டியாக பிடித்து வரிசை கட்டி இருக்கும் படங்கள்

Actor Sarathkumar: 90ல் சினிமாவிற்கு நுழைந்து கிட்டத்தட்ட 145 படங்களுக்கு மேல் ஹிரோவாக நடித்து இவருக்கென்று ஒரு இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் தான் சரத்குமார். அதன் பின் காலத்திற்கு ஏற்ப இவரை மாற்றிக் கொண்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையின் நாயகனாக செகண்ட் இன்னிங்ஸில் பல படங்களில் நடித்து வருகிறார்.

முக்கியமாக காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து இவருடைய பவர் பேக் பெர்பார்மன்சை அனைவருக்கும் அதிரடியாக காட்டினார். இதனை தொடர்ந்து இவர் நடித்து வந்த படங்கள் அனைத்தும் இவரை தூக்கிக் கொண்டாடும் விதமாகத்தான் இருக்கிறது. அப்படி சமீபத்தில் நடித்த படங்களான வானம் கொட்டட்டும், பொன்னியின் செல்வன், வாரிசு, ருத்ரன், கஸ்டடி மற்றும் போர் தொழில்.

Also read: சரத்குமார் நடிப்பில் மறக்க முடியாத 5 கிராமத்து படங்கள்.. ஒரே பாட்டில் ஓஹோன்னு வந்த சூர்யவம்சம்

இந்த படங்களின் மூலம் இவருடைய நடிப்பை மக்கள் மத்தியில் நச்சென்று பதிவிட்டு காட்டி இருப்பார். அதிலும் கடைசியாக நடித்த போர் தொழில் படத்தில் அளவுக்கு அதிகமாக நடிக்கவும் இல்லாமல், கதைக்கு என்ன தேவையோ அதை சரியான முறையில் இவரால தான் நடிக்க முடியும் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பை பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

மேலும் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் பாந்தரா என்ற படத்தில் நடிக்கிறார்.

Also read: 2 வாரம் உதயநிதி போடப் போகும் ஆட்டம்.. சரத்குமார் மட்டுமே கொடுக்கும் பெரிய டஃப்

அடுத்ததாக தமிழில் குற்றவாளி மற்றும் நிறங்கள் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். இன்னும் தொடர்ந்து இவருடைய ரீ என்டரியை சரியாக பயன்படுத்தி வருகிறார். மேலும் இவருடைய மெகா ஹிட் படமான சூரியவம்சம் பார்ட் 2 எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.மறுபடியும் சின்ராசு கேரக்டரை திரையில் பார்த்து ரசிக்க வேண்டும்.

அத்துடன் போர் தொழில் பார்ட் 2 வும் கூடிய விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இந்த படங்களில் உள்ள கேரக்டரை இவரை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. மேலும் 70 வயது ஆகியும் இன்னும் இவருடைய உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு ஹீரோ ரேஞ்சுக்கு மெயின்டைன் பண்ணி வருகிறார். இப்படிப்பட்ட சரத்குமாருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Also read: என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த இயக்குனர்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சரத்குமார்

- Advertisement -spot_img

Trending News