திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தி லெஜண்ட் படம் நிகழ்த்திய 5 சாதனை.. முதல் படத்திலேயே முத்திரை பதித்த அண்ணாச்சி

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரங்களில் நடிக்கும் போது ஏகப்பட்ட ட்ரோல்கள், மீம்ஸ்கள் வெளியானது. அதையெல்லாம் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத அண்ணாச்சி தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார். என்னதான் அவர் படத்திற்கு கேலி, கிண்டல்கள் வந்தாலும் இப்படம் 5 சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.

அதாவது தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் வயதாகியும் ஹீரோவாக நடிக்கிறார்கள். இவர்கள் இளவயது முதலே சினிமாவில் இருப்பதால் ரசிகர்கள் இவர்களை ஹீரோவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவில் 50 வயதில் ஹீரோவாக நடித்த முதல் நபர் நம்ம அண்ணாச்சி தான்.

அடுத்ததாக எந்த ஒரு நடிகரும் முதல் படத்திலேயே உலக அழகி உடன் நடித்ததில்லை. ஆனால் அண்ணாச்சி படத்தில் உலக அழகி பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதற்கு அடுத்தபடியாக ஒரு புதுமுக நடிகருக்கு தமிழ் சினிமாவில் இதுவரை ஆயிரம் தியேட்டர் ஒதுக்கியது இல்லை. ஆனால் அண்ணாச்சி படத்துக்கு உலகம் முழுவதும் 2,500 தியேட்டர்களில் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் இப்படம் வெளியானது.

மேலும் அறிமுக ஹீரோவாக அண்ணாச்சி நடித்த தி லெஜண்ட் படம் முதல் நாளே 2 கோடி வசூல் செய்து சாதனை படைத்து. அது மட்டுமல்லாமல் தற்போது வரை 10 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. ஒரு புதுமுக நடிகரின் படம் இந்த அளவுக்கு வசூல் சாதனை செய்தது இல்லை.

இவ்வாறு அண்ணாச்சி தன்னுடைய முதல் படத்திலேயே எண்ணற்ற சாதனைகள் புரிந்து வருகிறார். இந்த வெற்றி கொடுத்த உத்வேகத்தில் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த உள்ளார். இதனால் தமிழ் சினிமாவில் அண்ணாச்சியின் கொடி ஓங்கி பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News