திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விக்ரமுக்கு போட்டியாக வந்த அண்ணாச்சி.. வியாபார உரிமையை கையிலெடுத்த 3 முக்கிய புள்ளிகள்

சரவணா ஸ்டோர்ஸ் புகழ் அண்ணாச்சி தற்போது தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் ஹீரோவாக நடிக்கிறார் என்று சொன்னதுமே பல கிண்டல்களும், விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத அண்ணாச்சி தற்போது இந்த திரைப்படத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷனை அண்ணாச்சி மிக பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். அதில் பூஜா ஹெக்டே, தமன்னா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பல இளம் நடிகைகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த நடிகைகளுக்காக அவர் கோடி கணக்கில் செலவு செய்திருந்தார்.

இதுவே பலரின் கவனத்தையும் பெற்று படத்திற்கு ஒரு பிரமோஷன் ஆகவும் அமைந்தது. மேலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள வாடிவாசல் என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் வரும் ஜூன் 22ஆம் தேதி கிட்டத்தட்ட 800 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை பற்றி கேலி பேசிய பலரும் ஆச்சரியப்படும் வகையில் இந்த படம் ஒரு வெற்றி திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்னாச்சி தற்போது சாமர்த்தியமாக பல காய்களை நகர்த்தி வருகிறாராம். அதில் முக்கியமாக இந்த படத்தின் தியேட்டர் உரிமையை மூன்று முக்கிய புள்ளிகளுக்கு அவர் கொடுத்திருக்கிறார்.

அவர்கள் மூவருமே சினிமாவில் பழம் இன்று கொட்டை போட்டவர்கள். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தியேட்டர் உரிமையை அண்ணாச்சி மதுரை அன்புவிடம் கொடுத்திருக்கிறார். அதை அடுத்து அவர் எப்எம்எஸ் உரிமையை சஞ்சய் வாத்வா என்பவரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

இவர்தான் விக்ரம் திரைப்படத்தை உலக அளவில் கொண்டு சேர்த்தவர். இதைத் தொடர்ந்து கேரள உரிமையை அண்ணாச்சி அங்கு ஒரு பெரிய புள்ளியிடம் கொடுத்திருக்கிறாராம். இப்படி அண்ணாச்சி ஒவ்வொரு காரியங்களையும் பார்த்து பார்த்து செய்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அண்ணாச்சி படத்தின் பிரமோஷன்களுக்கு மட்டுமே அதிக செலவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அண்ணாச்சிக்கு இருக்கிறதாம். விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் அண்ணாச்சியின் நம்பிக்கையை காப்பாற்றுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending News