வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாண்டியனின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சரவணன்.. எல்லாம் தெரிந்தும் சைலண்டாக வேடிக்கை பார்க்கும் மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் மற்றும் பாக்கியம் இருவரும் சேர்ந்து ஆதார் அட்டையில் இருக்கும் வயசு வித்தியாசத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாதபடி கமுக்கமாக மறைத்து விட்டார்கள். அந்த வகையில் நாம் தப்பித்து விட்டோம் என்று பெருமூச்சு விட்டு தங்கமயில் நிம்மதியாகிவிட்டார்.

ஆனால் அந்த நேரத்தில் பதட்டத்தில் இருந்த பொழுது கோமதி, ராஜி மற்றும் மீனா சேர்ந்து ராஜி திருமணத்திற்கு கோமதி கூடவே இருந்து உதவி பண்ணதை உளறி விடுகிறார். அப்பொழுது இதை தங்கமயில் கேட்டிருப்பாரோ என்ற பயம் மூவருக்கும் வந்து விட்டது. ஆனால் தங்கமயில் வயசு வித்தியாசம் யாருக்கும் தெரிந்த விடக்கூடாது என்ற நினைப்பில் இருந்ததால் கோமதி சொன்னதை கவனிக்கவில்லை.

கோமதி உளறியதை கவனிக்காத தங்கமயில்

அதனால் ராஜி திருமணத்தைப் பற்றிய விஷயங்களையும் தெரிந்து கொள்ளாமல் தங்கமயில் போய்விட்டார். பிறகு பதிவு பண்ணும் இடத்திலும் பாக்கியம் உள்ளே புகுந்து சில விஷயங்களை களைத்ததால் அங்கேயும் யாரும் கண்டுபிடிக்காமல் போய்விட்டார்கள். அந்த வகையில் இந்த விஷயத்தில் தங்கமயில் தப்பித்து விட்டார்.

இருந்தாலும் அடுத்ததாக பாண்டியனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவம் காத்துக்கொண்டிருக்கிறது. கடையில் இருந்த பணம் ஆயிரம் ரூபாய் மற்றும் வங்கி கணக்கில் இருந்த பத்தாயிரம் ரூபாய் எப்படி காணாமல் போனது என்பது பாண்டியனுக்கு தெரிந்து விட்டது. அதனால் கோபமாக வீட்டுக்கு வந்த பாண்டியன், கதிரை சந்தேகப்பட்டு பேசி நீதான் எடுத்து இருப்பாய் என்று எனக்கு தெரியும்.

அதனால் எனக்கு என்னுடைய பணம் வேண்டும் என்று கேட்டு வற்புறுத்துகிறார். ஆனால் கதிர் என்னிடம் இப்பொழுது அந்த பணம் இல்லை என்று சொல்லிய நிலையில் பாண்டியன், கதிரை வீட்டை விட்டு வெளியே போ என்று அனுப்புகிறார். ஆனால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சரவணன் தம்பியை காப்பாற்றும் விதமாக பொங்கி எழுந்து அனைத்து உண்மையும் போட்டு உடைக்கிறார்.

அதாவது கதிர் பணத்தை எடுத்ததற்கு காரணம் எனக்காக தான். நானும் தங்கமயிலும் ஹனிமூன் போனபோது அந்த ஹோட்டல் 5000 ரூபாய் கிடையாது. 26 ஆயிரம் ரூபாய் இது தெரியாமல் தங்கமயில் இந்த ஹோட்டலை புக் பண்ணி விட்டார். அதனால் எங்களுக்கு உதவி பண்ணும் விதமாக தான் கதிர் கடையில் இருந்து பணத்தை எடுத்தான் என்கிற உண்மையை சரவணன் பாண்டியனிடம் சொல்கிறார்.

இதனால் பாண்டியன், தன்னுடைய மருமகள் தங்கமயில் இந்த மாதிரி ஒரு காரியத்தை நமக்கு தெரியாமல் செய்து இருக்கிறாரே என்று அதிர்ச்சியாக பார்க்கிறார். அத்துடன் தங்கமயில் மீது வைத்திருந்த மொத்த நம்பிக்கையும் சுக்கு நூறாக உடைந்து விட்டது. இனியும் இந்த பாண்டியன், தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்ப மாட்டார். ஆனாலும் இதைப் பற்றி பாண்டியன் கேட்டால் தங்கமயில் அழுது நடித்து பாண்டியனிடம் மிகப்பெரிய நாடகத்தை போட்டு விடுவார்.

ஆனால் இது எல்லா விஷயமும் மீனாவிற்கு தெரியும். இருந்தாலும் இதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் ராஜிடம் கூட சொல்லாமல் கமுக்கமாக இருந்து வேடிக்கை பார்த்து வருகிறார். தற்போது இந்த ஒரு காரணத்தை வைத்து ராஜி, தங்கமயிலுக்கு திருப்பி பதில் அளிக்கும் விதமாக எல்லா விஷயத்தையும் மாமாவிடம் மறைக்க மாட்டேன் என்று சொல்வீங்க தானே.

அப்படி என்றால் ஏன் இந்த விஷயத்தை மட்டும் மாமாவிடம் சொல்லாமல் என் வீட்டுக்காரரை பலியாடாக சிக்க வைத்து விட்டீர்கள் என்று கேள்வி கேட்கப் போகிறார். இதற்கு பதில் அளிக்க முடியாமல் மறுபடியும் தங்கமயில் அழுது மன்னிப்பு கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணி விடுவார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News