Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் தான் இந்த குடும்பத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்பதற்கு ஏற்ப பாண்டியன் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். அதற்கு ஏற்ற மாதிரி தங்கமயில் எந்த பொய்ப்பித்தலாட்டமும் பண்ணுவதே இல்லை என்று மாமாவிடம் மற்றவர்களை பற்றி எல்லா விஷயங்களையும் போட்டு கொடுத்து விடுகிறார்.
இதனால் பாண்டியனிடம் தங்கமயில் நல்ல பெயர் வாங்கி விட்டார். இதே மாதிரி புருஷனையும் தன் கைவசம் வைத்துக்கொண்டு குடும்பத்தையே ஆட்டி படைக்க வேண்டும் என்று அம்மா கொடுத்த ஐடியாவின் படி சரவணனை ஹனிமூன் க்கு கூட்டிட்டு போக பிளான் பண்ணிவிட்டார். இதை பற்றி ஏற்கனவே சரவணன் இடம் சொல்லிய பொழுது அப்பாவிடம் கேட்டு பெர்மிஷன் வாங்குகிறேன் என்று சொல்லி இருந்தார்.
தங்கமயில் நடத்தும் அடுத்த அரங்கேற்றம்
இதனை தொடர்ந்து சரவணன் மொட்டை மாடியில் தம்பிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். நேரம் ஆகியும் வரவில்லை என்பதால் மாடிக்கு போயி தங்கமயில், சரவணனை தூங்க கூப்பிடுகிறார். ஆனால் சரவணன், நீ போ நான் கொஞ்ச நேரம் பேசிட்டு வருகிறேன் என்று சொல்கிறார். கீழே வந்து தங்கமயில் புருஷனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சரவணன் வராமல் காலையில் தான் எழுந்து வருகிறார்.
இதனால் கோபத்துடன் படுத்துக் கொண்டிருந்த தங்கமயிலை கண்டுக்காமல் சரவணன் எப்பொழுது போல ஆபீசுக்கு கிளம்பி போய் விட்டார். மதிய நேரத்தில் சாப்பாடு கொண்டு வரும் தங்கமயிலை இன்னும் வரக்காணோம் என்று கால் பண்ணி பார்க்கிறார். ஆனால் தங்கமயில் போன் எதுவும் அட்டென்ட் பண்ணவில்லை. இதனால் வீட்டிற்கு திரும்பிய சரவணன் தங்கமயிலை பார்க்கிறார்.
தங்கமயில் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது ஏதும் உடம்பு சரியில்லையா என்று கூப்பிட்டு விசாரிக்கிறார். அதற்கு தங்கமயில் நீலி கண்ணீர் வடித்து, உங்களுக்கு என் மேல பாசமே இல்ல மாமா. நான் ஒருத்தி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை மறந்து என்னை கண்டு கொள்ளாமல், உங்கள் தம்பி தான் முக்கியம் என்பது போல் மாடியில் இருந்து தூங்கி விட்டீர்கள். எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்.
உடனே சரவணன், நான் உன் மேல பாசம் அதிகமாக வைத்திருக்கிறேன் என்பதை எப்படி நிரூபித்து காட்டணும் சொல்லு நான் அதை பண்ணுகிறேன் என்று கேட்கிறார். இதுதான் சான்ஸ் என்று தங்கமயில், நம்ம இரண்டு பேரும் சேர்ந்து ஹனிமூனுக்கு போகணும் என்று கேட்கிறார். உடனே சரவணன் சரி நான் அப்பாவிடம் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
ஆனால் சரவணன் இப்படி ஒரு விஷயத்தை கேட்பான் என்று எதிர்பார்க்காத பாண்டியன் முதல் முறையாக தடுமாற்றம் அடையப்போகிறார். சரவணன் மட்டும் தான் தன் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஒழுங்கா இருக்கிற பிள்ளை என்று நினைத்து மற்ற இரண்டு பிள்ளைகளை எப்ப பார்த்தாலும் திட்டி கொண்டிருந்தார். ஆனால் சரவணன் தான் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக பாண்டியின் தலையில் இடியை இறக்கப் போகிறார்.
ஆக மொத்தத்தில் சரவணன் மற்றும் தங்கமயில் கேட்டதற்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல் பாண்டியன் அவர்களை ஹனிமூன் அனுப்பி வைக்கப் போகிறார். அப்படி கொஞ்ச நாள் வீட்டில் தங்கமயில் இல்லாத சந்தோஷத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கப் போகிறார்கள். அதே நேரத்தில் மீனாவும் ராஜியும் குதூகலமாக கொண்டாட போகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- கதிரை அடிமையாக்க நினைத்த பாண்டியன்
- Pandian Stores 2: தங்கமயில் சரவணன் கல்யாணத்தில் ராஜிக்கு பிறந்த விடிவு காலம்
- பொண்டாட்டிக்காக பாண்டியனை அடக்கிய மகன்