புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பொண்டாட்டிக்காக தம்பியை காட்டிக் கொடுத்த சரவணன்.. சந்தியாவின் ஐபிஎஸ் கனவு நிறைவேறுமா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி 2. இத்தொடரில் தற்போது ஆதியின் திருமண கொண்டாட்டம் அரங்கேறி வருகிறது. மேலும் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சந்தியா வெளி மாநிலத்திற்கு ட்ரைனிங் போக சிவகாமி சபதம் போட்டிருந்தார்.

அதாவது வீட்டில் காணாமல் போன ஐந்து லட்சம் பணத்தை யார் எடுத்தது என்பதை கண்டுபிடித்தால் சந்தியாவை வெளியூருக்கு செல்ல அனுமதிப்பதாக சிவகாமி கூறி இருந்தார். அதேபோல் சந்தியா தனது ஐபிஎஸ் மூளையை கசக்கி ஆதி தான் இந்த பணத்தை திருடியது என்பதை கண்டுபிடித்து விட்டார்.

Also Read :ஈகோவை விட்டு இறங்கி வந்த பாரதி.. இப்பயாவது ஒரு எண்டு கார்டு போடுங்கப்பா

ஆனால் அங்கு தான் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட். அதாவது சந்தியாவின் காலில் விழுந்த கதறிய ஆதி இந்த உண்மையை யாரிடமும் சொல்ல வேண்டாம் அப்படி சொன்னால் கல்யாணமே நின்று விடும் என்று சந்தியாவிற்கு வேண்டுகோள் வைக்கிறார். இதனால் சந்தியாவும் செய்வதறியாமல் போகிறார்.

மேலும் மறுநாள் என்னால் இந்த பணத்தை யார் திருடியது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என சந்தியா கூறுகிறார். இதை வைத்தே சந்தியாவை ஐபிஎஸ் ட்ரைனிங்க்கு போகவிடாமல் செய்துவிடலாம் என்ற சந்தோஷத்தில் சிவகாமி இருந்தார். அந்தச் சமயத்தில் சரவணன் திருடனை அழைத்து வருவதாக சொல்லி ஆதியின் சட்டையை பிடித்து இழுத்து வருகிறார்.

Also Read :புருஷன் கல்யாணத்துக்கே அழைத்த மகள்.. ராதிகாவின் திருமணத்தை நிறுத்த போட்ட பிளான்

இந்த பணத்தை திருடியது ஆதி தான் என எல்லோர் முன்னிலையிலும் சரவணன் உண்மையை போட்டு உடைக்கிறார். இதனால் நிலைகுலைந்து போன சிவகாமி ஆதியை அடிக்கிறார். அதன் பின்பு சந்தியா ஆதிக்காகத்தான் உண்மையை மறைத்தார் என்பது சிவகாமிக்கு தெரிய வருகிறது.

இதனால் சிவகாமியின் சம்மதத்துடன் சந்தியா ஐபிஎஸ் படிக்க வெளியூருக்கு செல்ல உள்ளார். ஆனால் தன்னை சரவணன் காட்டி கொடுத்ததினால் ஆதி இந்த விஷயத்தில் ஏதாவது வில்லங்கம் செய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சுவாரஸ்யமாக ராஜா ராணி 2 தொடர் சென்று கொண்டிருக்கிறது.

Also Read :வானத்துக்கும் பூமிக்கும் குதித்த கதிர்.. உறவே வேண்டாம் என விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சொந்தம்

Trending News