மாமியார் கையில் சிக்கிய ஆதாரம்.. அசிங்கப்பட்டு போன சரவணனின் குடும்பம்

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சரவணனின் தங்கை பார்வதியின் திருமணம் இன்று நடக்க இருக்கிறது. ஆனால் இந்த திருமணத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என அர்ச்சனா விக்கியை ஏவிவிட்டு பார்வதிக்கும் விக்கிக்கும் இடையே இருந்த உறவை அம்பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறாள்.

ஆனால் விக்கி அர்ச்சனா சொன்னதை அப்படியே செய்யாமல், தன்னுடன் ஒரு மணி நேரம் மட்டும் இருந்து விட்டு அதன் பிறகு பாஸ்கரை திருமணம் செய்து கொள், இல்லை என்றால் நாம் இருவரும் காதலிக்கும் போது எடுத்த புகைப்படத்தை திருமண மண்டபத்தில் இருக்கும் அனைவரிடமும் கொடுத்து விடுவேன் என மிரட்டுகிறான்.

எனவே குடும்ப மானத்தை காப்பாற்றுவதற்காக விக்கி சொல்லும் கண்டிஷனுக்கு உடன்படாத பார்வதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள். அந்த சமயம் பார்வதி ரூமை மற்றொரு அண்ணன் கதவை தட்ட. அந்த முடிவை கைவிடுகிறாள். அதன் பிறகு விக்கி கொடுத்த கால அவகாசம் நிறைவடைந்ததும் அவன் சொன்னபடி மண்டபத்தில் இருப்பவர்களிடம் புகைப்படத்தை பார்க்கும்படி செய்த விக்கி செய்துவிடுகிறார்

,அத்துடன் பார்வதி விக்கி இருவரும் இருக்கும் புகைப்படத்தை ஒரு கிப்ட் பேக் பண்ணி அதை பார்வதிக்கு அனுப்ப, அதை பார்வதியின் மாமியார் பார்த்துவிடுகிறார். அதன்பிறகு பாஸ்கரின் குடும்பத்தினரிடமும் பார்வதி தவறானவள் என்பதை உறுதிப்படுத்துகிறான்.

ஆனால் உண்மையை புரிந்து கொள்ளாத பாஸ்கரின் குடும்பம் பார்வதியின் குடும்பத்தை தரக்குறைவாக பேசியதுடன், பாஸ்கரனும் பார்வதியை புரிந்துகொள்ளாமல் பார்வதியின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டவறு பேசியது பார்வதியை மேலும் கலக்கம் அடையச் செய்தது.

அதன்பிறகு பாஸ்கரின் குடும்பம் இந்த திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று மண்டபத்தை விட்டு கோபத்துடன் கிளம்ப தயாராகிறது. இதன்பிறகு நிச்சயம் சந்தியா பார்வதியின் திருமணத்தை இப்படியே நிறுத்தி விட விடமாட்டாள். நிச்சயம் பார்வதி பக்கம் இருக்கும் நியாயத்தை ஐபிஎஸ் அதிகாரி போல் வாதிட்டு விக்கியின் பித்தலாட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப் போகிறாள் அதன் பிறகு பார்வதி பாஸ்கரன் திருமணம் இன்றே கோலாகலமாக நடக்கப்போகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →