Rajini: சூப்பர் ஸ்டார் தான் கடந்த சில நாட்களாக சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருக்கிறார். கலைஞர் நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி முன்வைத்த ஒரு கருத்துக்கு துரைமுருகன் கொடுத்த பதிலடிதான் இப்போது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
பல்லு போன நடிகர்கள் எல்லாம் நடிக்கும் போது நாங்க அரசியலில் இருக்கக் கூடாதா என அவர் பேசி இருந்தார். இதற்கு கடுமையாக எதிர்ப்பை தெரிவிக்கும் ரஜினி ரசிகர்கள் எங்க தலைவரை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் என கொதித்துப் போய் இருக்கின்றனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து துரைமுருகன் நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்றி விடாதீர்கள் என கூறியிருந்தார். ஆனாலும் அரசியல் வட்டாரத்தில் இந்த விஷயம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்த பழ கருப்பையா
இந்நிலையில் அரசியல் பிரபலமும் சர்க்கார் படத்தின் வில்லனுமான பழ கருப்பையா துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது ரஜினிக்கு மக்களிடத்தில் செல்வாக்கு இருக்கிறது. அவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.
அவர் 90 வயது வரை கூட நடிப்பார் உனக்கென்ன வந்துச்சு என காட்டமாக பேசி இருக்கிறார். மேலும் துரைமுருகன் இருப்பது வேறு துறை. ரஜினி இருப்பது போட்டிகள் நிறைந்த துறை. இருந்தும் கூட இன்று நம்பர் ஒன் இடத்தில் அவர் இருப்பது அதிசயம் தான்.
மேலும் பல இளைஞர்கள் சினிமாவுக்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் யாராலும் அவருடைய இடத்தை பிடிக்க முடியவில்லை. அதுதான் அவருடைய வெற்றி என ரஜினிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். ஆக மொத்தம் பத்த வச்சுட்டியே பரட்டை என்பது போல் தான் இந்த விவகாரம் தீப்பிடித்து எரிகிறது.
ரஜினிக்கு ஆதரவாக இறங்கிய அரசியல் பிரபலம்
- ஆளும் கட்சிக்குள் சம்பவம் செய்த ரஜினி
- சர்ச்சையை கிளப்பிய ரஜினியின் பேச்சு
- துரைமுருகனை சபையில் அசிங்கப்படுத்தி பேசிய ரஜினி