வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஜெ-வுக்குஒரு சசிகலா, விஜய்க்கு ஒரு புஸ்ஸி ஆனந்த்.. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ

Vijay-Bussy Anand: விஜய் தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டாலும் வெளியிட்டார் தற்போது அதுதான் பரபரப்பு செய்தியாக மாறி இருக்கிறது அதிலும் தளபதி பெயரை சொல்லிக்கொண்டு அக்கப்போர் பண்ணும் அல்லக்கைகளின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கிறது.

அதிலும் விஜய்க்கு எல்லாமும் ஆக செயல்படும் புசிய ஆனந்தின் பேச்சு தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது அதாவது விஜய்யின் இலக்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் என்பது தெரிந்து விட்டது. தற்போது அதை வைத்து காய் நகர்த்தும் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுடன் ரகசிய மீட்டிங் போட்டுக் கொண்டிருக்கிறாராம்.

அதில் அவர் விஜய்யின் கடைசி படம் பற்றி கூறிவிட்டு தலைவர் 26 என்ற ஒரு செய்தியை குறிப்பிட்டுள்ளார். அதாவது 2026 ஆம் ஆண்டு விஜய் தான் முதல்வர் என்பதன் மறைமுக குறிப்பு தான். இதைப்பற்றி நிர்வாகிகளுக்கு கூறும் புஸ்ஸி ஆனந்த் நம்முடைய தலைவருக்கு நீங்கள் எல்லாம் தோழர்கள் தான்.

Also read: விஜய் இன்று வரை ஒதுக்கி வைத்திருக்கும் 3 இயக்குனர்கள்.. பல கோடி கொடுத்தாலும் தளபதி கிட்ட வேலைக்கு ஆகாது

மேலும் நிறைய அரசு பதவிகள் இருக்கிறது. கட்சி நிர்வாகிகள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் அதேபோல் புற மாவட்ட தலைவர் சரவணனுக்கு எம்.எல்.ஏ சீட் உறுதி. அவர் பச்சை பேனாவால் கையெழுத்து போடுவார் என அளந்து விட்டு இருக்கிறார். இதுதான் தற்போது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

கட்சி ஆரம்பித்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் இந்த அலப்பறை தேவைதானா? விஜய் இப்படிப்பட்டவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு எப்படித்தான் காலம் தள்ளப் போகிறாரோ தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு ஒரு சசிகலா என்றால் விஜய்க்கு இந்த புஸ்ஸி ஆனந்த் என விஜய் ரசிகர்களே வெளிப்படையாக குமுறி வருகின்றனர்.

Also read: விறகுகடை முதலாளி டு விஜய்யின் ரைட் ஹேண்ட்.. பலரும் அறியாத புஸ்ஸி ஆனந்த் வரலாறு

Trending News