வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மதங்களைக் கடந்த மனிதாபிமானம்.. இரண்டாம் கட்ட வசூலுக்கு தயாரான சசிகுமாரின் அயோத்தி

இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்த சசிகுமார் நடிகராகவும் ஆரம்பத்தில் நல்ல படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதன் பின்பு அவரது நடிப்பில் எக்கச்சக்க படங்கள் வெளியான நிலையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் போகவில்லை. இந்நிலையில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் அயோத்தி என்ற படத்தில் சசிகுமார் நடித்திருந்தார்.

இதில் சசிகுமார் ஜோடியாக பிரியா அஸ்ரானி நடித்திருந்தார். மேலும் குக் வித் கோமாளி புகழ், யஷ்பால் ஷர்மா மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். அயோத்தி படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி நேர்மையான விமர்சனங்களை பெற்று ஓரளவு நல்ல வசூலை பெற்றிருந்தது. மேலும் பல வித்தியாசமான கதைகளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

அயோத்தி படமும் இதில் மிகவும் வித்தியாசமான கதைகளம் தான். அதாவது ஊரு விட்டு ஊரு வந்தா ஒரு குடும்பத்தில் பெண் ஒருவர் இறந்து போன நிலையில் அவரது குடும்பத்தின் விருப்பப்படி பல சிரமங்களுக்கு உட்பட்டு அவர்களுடைய சொந்த ஊருக்கு உடலை அனுப்பி வைப்பது தான் அயோத்தி படத்தின் கதை.

இதுவரை இது போன்ற வித்தியாசமான கதையில் சசிகுமார் நடித்ததில்லை. அவ்வளவு கனகச்சிதமாக இந்த படத்தில் நடித்திருந்தார். இப்போது இரண்டாவது முறையாக கல்லா கட்ட அயோத்தி படம் தயாராகி உள்ளது. அதாவது சமீபகாலமாக திரையரங்குகளில் வெளியான படங்கள் சில காலத்திற்குப் பிறகு ஓடிடியில் வெளியாகி வருகிறது.

அதன்படி அயோத்தி படமும் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் சென்று பார்க்காதவர்கள் இப்போது வீட்டிலிருந்து இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மதங்களைக் கடந்து மனிதாபிமானம் இருப்பதை இந்த படம் காட்டியுள்ளது.

இப்போதும் பலர் சாதி, மதம் ஆகியவற்றால் பிளவுபட்டு உள்ளனர். மேலும் அவர்களை தீண்ட தகாதவர்கள் போல நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கும் படியாக அயோத்தி படம் அமைந்திருந்தது. கண்டிப்பாக எல்லோருமே அயோத்தி படத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும். மேலும் சசிக்குமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்துள்ளது.

Trending News