புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூழ்நிலை கைதியான சசிகுமார்.. உச்சகட்ட விரக்தியில் படும்பாடு

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கவனம் பெற்ற சசிகுமார் அதை தொடர்ந்து ஒரு ஹீரோவாகவும் மாறினார். சுந்தரபாண்டியன், போராளி உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் இவர் ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

அதன்படி சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு லாபத்தை கொடுத்தது. ஆனால் அதன் பிறகு இவர் தயாரித்த கிடாரி, பலே வெள்ளையத்தேவா, கொடிவீரன் போன்ற திரைப்படங்கள் பெரும் நஷ்டத்தை கொடுத்தது.

இதனால் அவர் பெரும் கடன் சுமைக்கும் ஆளானார். அதன் காரணமாக அவர் படம் இயக்குவது மற்றும் தயாரிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு முழு நேர நடிகராக மாறினார். ஆனாலும் அவருடைய நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.

எவ்வளவு முயற்சி எடுத்தும் அவருடைய திரைப்படங்கள் ஓடாத நிலையில் அவர் தற்போது பெரும் விரக்தியில் இருந்து வருகிறார். படங்களும் ஓடவில்லை, கடன் சுமையும் அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் சூழ்நிலை கைதியாக மாறி படங்களில் நடித்தாலும் அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

இப்படி ஒரு பிரச்சனையில் இருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் சசிகுமார் தற்போது தீவிர சிந்தனையில் இருக்கிறாராம். அதன்படி நடிப்பதை விட்டுவிட்டு முழு நேரமாக படம் இயக்குவதில் கவனம் செலுத்தலாமா என்ற ஒரு யோசனையிலும் அவர் இருக்கிறாராம்.

இருப்பினும் அவர் எந்த பக்கம் போவது என்ற வழி தெரியாமல் இன்னும் குழப்ப நிலையில் தான் இருக்கிறார். ஆனாலும் இவர் டைரக்ஷனை தான் தேர்ந்தெடுப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் மிகப்பெரிய நிறுவனம் ஒன்று படம் இயக்குவதற்காக இவரை அணுகி இருக்கிறதாம். கூடிய விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News